வியாழன், 12 பிப்ரவரி, 2015

தடைகளும், எதிரிகளுமே உண்மையான நண்பர்கள்


வாழ்க்கையில் உண்மையான நண்பர்கள் யார் தெரியுமா? நமது வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் இடையூறுகளும், தடைகளும், நமது எதிரிகளும்தான்.
இப்படி சொல்வதைக் கேட்டு உங்களுக்குக் கோபம் கூட வரலாம். ஆனால். இதுதான் உண்மை.
அது எப்படி என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள் விளங்கும்..
பொதுவாகவே, நாம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று நம்முடனே இருக்கும் நண்பன் கூட நினைக்க மாட்டான். ஏன் என்றால், நாம் உயர்வது அவனுக்குப் பிடிக்காது.  ஏதேனும் நீங்கள் முயற்சிக்கும் போது அது குறித்து கிண்டல் செய்வார்கள். உங்களை ஏளனமாகப் பேசுவார்கள். அதனைக் கேட்டு நீங்கள் மனம் தளரக் கூடாது.
அதே சமயம், ஒரு எதிரி நீ ஒரு ஆளா, இதைக் கூட உன்னால் செய்ய முடியாது, உனக்கு ஒன்றும் தெரியாது என்று பல வசனங்கள் பேசி உங்களை எரிச்சல் அடைய வைக்கும் போது, ஏன் இது என்னால் முடியாது என்று நீங்கள் எழுந்து நின்று சாதிக்கும் வாய்ப்பு ஏற்படும். அந்த வைராக்கியத்தோடு நீங்கள் எடுக்கும் முயற்சி நிச்சயம் வெற்றியை அளிக்கும்.
ஒருவர் இது உங்களால் முடியாது என சொல்லும் போதுதான், அதை  செய்ய வேண்டும் என்ற ஒரு உந்துதல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்படும். எனவே, கூட இருக்கும் நண்பன் கொடுக்கும் உற்சாகத்தை விடவும், எதிரி சொல்லும் கடினமான சொற்கள் பலரது வாழ்க்கையிலும் ஒளி விளக்காக அமைந்திருப்பது உண்மை.
ஒரு பயிற்சி வகுப்புக்கு செல்கிறீர்கள்.. அந்த வகுப்புக்குச் சென்ற சில நாட்களில், உங்களது உறவினர், நீ எல்லாம் அங்க போய் அவ்ளோ எக்ஸாம் எழுதி படிக்க மாட்ட.. பாரேன்னு சொன்னால், ஆமாம், நம்மால் அப்படி முடியாது என்று நினைக்காமல், அவர் சொன்னதற்காகவே, அந்த பயிற்சியை முடித்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும்.
அதே போல, நாம் நடந்து கொண்டிருக்கும் போது, நமது பாதையில் ஒன்று சிறிய சாக்கடை குறுக்கிட்டால் திரும்பி வந்துவிடுவோமா அல்லது அந்த சாக்கடையை தாண்டி குதித்து செல்வோமா.. பெரும்பாலானோர் தாண்டி குதித்துத் தான் செல்வோம். அவ்வாறு ஒரு சாக்கடை வரும் போதுதானே நமக்கு தாண்டி குதிக்கத் தெரியும் என்பதை நாம் உணர்வோம். இதுவும் ஒரு உதாரணம்தான்.
நீங்கள் சென்று கொண்டிருக்கும் பாதையில் (வாழ்க்கையில்) எந்த தடையும் ஏற்படவில்லை, சுமூகமாக செல்கிறது என்றால், நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்பதை உணருங்கள் என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார்.
இந்த வார்த்தைகளை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
எனவே, வாழ்க்கையில் நிகழும் துன்பங்கள், துயரங்களை நேசியுங்கள். அது ஒவ்வொன்றில் இருந்தும் நீங்கள் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டிருப்பீர்கள்.
வேதனைகள் சோதனைகளைத் தயக்கம் இன்றி தைரியமாக சந்திக்கத் தயாராகுங்கள். சோதனைகளையும், வேதனைகளையும், எதிர்கொள்பவர்கள்தான் சாதனையாளர்களாகின்றார்கள்.
சும்மா ஓரமாகப் படுத்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka