சனி, 28 பிப்ரவரி, 2015

அறுவடை எந்திர உரிமையாளருக்கு கொலை மிரட்டல் அரசு பஸ் கண்டக்டர் கைது




திருத்துறைப்பூண்டியில் அறுவடை எந்திர உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அரசு பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.

கொலை மிரட்டல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் குண சேகரன் மகன் மணிகண்டன் (வயது35). இவர் அறுவடை எந்திரம் வைத்து, அதை வாடகை விட்டு தொழில் செய்து வருகிறார். இவரிடம் மருதவனம் வடக்கு தெருவை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் குறிஞ்சிவேந்தன் (34) என்பவர் அறுவடை எந்திரத்தை வாடகைக்கு எடுத்து இருந்தார். இதற்கான வாடகை தொகையை கேட்பதற்காக சம்பவத்தன்று மணிகண்டன், குறிஞ்சிவேந்தனின் வீட்டிற்கு சென்றார். அப்போது குறிஞ்சிவேந்தன், மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மணிகண்டன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில், குறிஞ்சிவேந்தன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத் தார்.

கைது

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, சப்- இன்ஸ்பெக்டர்கள் அருள் பிரியா, கல்யாணசுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குறிஞ்சிவேந்தனை கைது செய்தனர். இதையடுத்து குறிஞ்சிவேந்தன் திருத்துறைப் பூண்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சிவா, குறிஞ்சிவேந்தனை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka