ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

6 பேர் மீதான வழக்கை கைவிடக் கோரி மறியல்

திருத்துறைப்பூண்டி அண்ணா நகரில் இளைஞரை தற்கொலைக்குத் தூண்டியதாக 6 பேர் மீது போடப்பட்ட வழக்கை கைவிடக் கோரி, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

அண்ணா நகர் பகுதி ஜீவா தெருவைச் சேர்ந்தவர் இரணியன் மகன் ஹரிகிருஷ்ணன் (18). இவர் வியாழக்கிழமை மாலை அண்ணாநகர் பகுதியில் பெருமாள்கோவில் அருகே உள்ள பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது, அந்த பகுதியைச் சேர்ந்த இளவரசி (45), சியாமளா என்கிற மேனகா ஆகியோர் ஹரிகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக அந்த பகுதியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் ராஜா, மு. சரவணன், கோ. நாகராஜன், எம். விக்னேஸ்வரன் ஆகியோரும் பேசியதாகக் கூறப்படுகிறது. வீடு திரும்பிய ஹரிகிருஷ்ணன் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 6 பேர் மீதும் வழக்குப் பதிந்தனர். இவர்களில் இளவரசி, மேனகா இருவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இளைஞர் தற்கொலைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் காரணமல்ல என்றும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை கைவிட வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் வ. மதியழகன், காவல் ஆய்வாளர் ஆனந்தவேலு ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka