செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.2 லட் சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதிவாணன் வழங்கினார்.




மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்
1.பட்டாமாறுதல்,
2.புதிய குடும்ப அட்டை,
3.ஆக்கிர மிப்பு அகற்றுதல்,
4.கல்விக்கடன்,
5.வீட்டுமனைப்பட்டா
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பொது மக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இவ்வாறு 210 மனுக்கள் பெறப்பட்டன. இந்த கோரிக்கை மனுக்களை கலெக்டர் மதிவாணன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

அதைதொடர்ந்து நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச் சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நிதி உதவியாக தலா ரூ.15 ஆயிரம் வீதம் 11 பேருக்கு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம், 2014-2015 ஆம் ஆண் டில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை திட்டத்தின் கீழ் தாட்கோ துறையின் மூலம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் 5 பேருக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதிவாணன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி மோகன் ராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி அசோகன், தனித்துணை கலெக்டர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka