செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

திருத்துறைப்பூண்டி பகுதியில் வீடுகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு டெங்கு விழிப்புணர்வு பணி



திருத்துறைப்பூண்டி ஒன்றியம் விளக்குடி கிராமத்தில் பொதுமக்களிடம் கலெக் டர் மதிவாணன் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவாரூர் கலெக்டர் மதிவாணன் திருத்துறைபூண்டி ஒன்றியம் விளக்குடி ஊராட்சியில் டெங்கு நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடுகளுக்கு நேரில் சென்று நீர் தேங்கி நிற்கும் பொருட்களான தேங்காய்மட்டை, டயர், ஆட்டு உரல் உட்பட பல்வேறு பொருட்களை அப்புறப்படுத்த அலுவர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு நடத்திய கலெக்டர் அங்கு பணியிலிருந்த மருத்துவரிடம் காய்ச்சலுடன் வரும் பொதுமக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கும்படியும், மேல்சிகிச்சை தேவைப்பட்டால் உடனடியாக திருத்துறைபூண்டி அரசு மருத்துவமனை அல்லது திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். மாவட்ட திட்ட அலுவலர் மேகன் ராஜ், திருத்துறைபூண்டி தாசில்தார் மதியழகன், பி.டி.ஓக்கள் தமிழ்மணி, அருள்சேகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka