வியாழன், 5 பிப்ரவரி, 2015

திருத்துறைப்பூண்டி தாலுகாவில் தேங்கிய நெல் மூட்டைகள் விரைவில் அனுப்பப்படும்ஆய்வு செய்த மண்டல மேலாளர் தகவல்




திருத்துறைப்பூண்டி தாலுகா பகுதியில் உள்ள 55 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பது குறித்து நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளி யானது.  இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருவாரூர் மண்டல மேலாளர் அழகிரிசாமி நேற்று திருத்துறைப்பூண்டி தாலுகா முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்தார். பின்னர் தின கரன் செய்தியாளரிடம் அவர் கூறுகையில்:  இந் தாண்டு ஒரே சமயத்தில் அறுவடை நடந்ததால் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை கொண்டுவந்துள்ளனர். கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படாமல் இருக்க பணம், சாக்கு என அனைத்து  வசதிகளும் தடையின்றி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் செல் போனில் தொடர்புகொண்டு தெரிவிக்கும் புகா ருக்கு கூட முக்கியத்துவம் கொடுத்து உடனுக்குடன் தீர்வு காணப் பட்டு வருகி றது.

திருவாரூர் மாவட்டத்தில் 412 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களி லும். 12 நடமாடும் வாகனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளில் 18 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1 லட்சத்து 81 ஆயிரத்து 211 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டியில் நெல் மூட்டைகளை எடுத்து செல்ல ரயில் வசதி இல்லாவிட்டாலும், தனி கவனம் செலுத்தி லாரிகளில் வெளிமாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது.  மாவட் டம் முழுவதும் உள்ள 26 அரிசி ஆலைகளுக்கு அர வைக்கு நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது. திருத்துறைப் பூண்டி பகுதி யில் உள்ள கொள் முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை இரண்டொரு நாளில் முழுமையாக எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். ஆய்வின்போது கண்காணிப்பாளர்கள் வெள்ளைசாமி, மெய்கண்டமூர்த்தி, தர ஆய்வாளர் ராமதாஸ், நமது நெல்லை காப்போம் மாநில ஒருகிணைப்பாளர் நெல் ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka