ஞாயிறு, 8 மார்ச், 2015

திருத்துறைப்பூண்டி நெல் ஜெயராமனுக்கு குடியரசு தலைவர் விருது



திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள ஆதிரெங்கத்தில் விவசாய பண்ணை நடத்தி வருகின்ற நெல் ஜெயராமனுக்கு மேன்மை தங்கிய குடியரசு தலைவர் திரு. பிரனாப் முகர்ஜி அவர்கள் தங்களது திருக்கரங்களால் 7&3&2015 மற்றும் 8&3&2015 ஆகிய தேதிகளில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள விழாவில் பாரம்பரிய நெல் சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்திற்கான “தேசிய அடிமட்ட கண்டுபிடிப்பிடிப்புகான விருது” - NATIONAL GRASSROOTS (NIF) AWARD - 2015 என்ற விருதையும், பாரம்பரிய அறிவு மற்றும் உயிர் பன்மயம் பாதுகாப்புக்கான “காந்திய இளம் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகான விருது” - GANDHIAN YOUNG TECHNOLOGICAL INNOVATION (GYTI) AWARD – 2015 என்ற இரண்டு விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தவுள்ளார். 




இந்த தகவல் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞாணி நம்மாழ்வாரின் வழியில் நின்று தடம் மாறாமல் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து பாரம்பரிய நெல்விதைகளை பாதுகாத்து அவற்றை விவசாயிகளுக்கு ஜெயராமன் வழங்கி வருகின்றார். பராம்பரிய நெல்லை விவசாயிகளிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு ஆண்டு தோறும் ஜெயராமன் நடத்தி வருகின்ற நெல் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழாவின்போதும் மற்றையநேரங்களிலும் மழை வெள்ளம் வறட்சியை தாங்கக்கூடிய பாரம்பரிய பயிர்களை மற்ற விவசாயிகளுக்கு வழங்கி வருவதன் மூலம் அந்நிய மரபனு மாற்ற விதைகளை அனுமதிக்காமல் நம்மண்ணையும் மக்களையும் பாதுகாக்கின்ற பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்ற ஜெயராமனுக்கு இந்த விருது வழங்கியிருப்பது மிகவும் பொருத்தமானது. 





 மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நமது நெல்லை காப்போம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும், இயற்கை உழவர் இயக்க மாநில செயலாளராகவும் பணியாற்றி வருகின்ற நெல்ஜெயராமனின் இந்த தனித்த முயற்சிக்கும், உழைப்புக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கிகாரம். இந்த குடியரசு தலைவர் விருது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka