வெள்ளி, 20 மார்ச், 2015

கோர்ட்டில் தற்கொலைக்கு முயன்ற முதியவர் கைது


நில மோசடி வழக்கு தள்ளுபடியான விரக்தியில் கோர்ட்டில் தற்கொலைக்கு முயன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

நில மோசடி வழக்கு

திருவாரூர் புதுத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 80). சமையல் வேலை பா£த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டு மனையை அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன், தெட்சிணாமூர்த்தி ஆகியோர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 1999-ம் ஆண்டு நடராஜன் திருவாரூர் கோர்ட்டில் நில மோசடி வழக்கு தொடர்ந்தார்.

16 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி திருவாரூர் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் நடராஜன் அதிருப்தியில் இருந்தார். நேற்று திருவாரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்த அவர், உரிமையியல் கோர்ட்டிற்கு அருகே சென்றார். பின்னர் தனக்கு நீதி கிடைக்கவில்லை என கூறி மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் போலீசார் நடராஜனை தடுத்து சமாதானப்படுத்தினர்.

கைது

இதுதொடர்பாக தகவல் அறிந்த திருவாரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அன்பழகன், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka