சனி, 21 மார்ச், 2015

காவிரி டெல்டாவில் மீத்தேன் திட்டம் ரத்து? : மத்திய அரசு முடிவு

திருவாரூர்: காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்க தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த திட்டத்தையே கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை மையப்படுத்தி சுமார் 766 சதுரகிமீ பரப்பளவிற்கு  நிலக்கரி படிமத்தின் மீது  மீத்தேன் வாயு படர்ந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை  வணிக ரீதியாக எடுத்து விற்பனை செய்வதற்காக அரியானா மாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடந்த 2010ம் ஆண்டும்  டெண்டர் வழங்கியது. இத்திட்டம்  செயல்படுத்தப்பட்டால்  விவசாயத்தொழிலை அடிப்படையாக கொண்டுள்ள திருவாரூர், தஞ்சை விளைநிலங்கள் தண்ணீரின்றி பாதிக்கப்படும். குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகளும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து  உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து  தமிழக அரசு இத்திட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்தது.  இந்நிலையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில்  உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளிக்கையில், மீத்தேன் திட்டத்திற்கு உரிமம் பெற்றுள்ள நிறுவனம்  குறைந்தபட்ச பணியை கூட தொடங்கவில்லை. மத்திய அரசு கேட்ட சில ஆவணங்களையும், வங்கி உத்தரவாதம் உள்ளிட்டவற்றையும் ஒப்படைக்கவில்லை. கான்டிராக்ட் விதிமுறைகளை மீறியதால்  கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்யும் என்று கூறியுள்ளார். 

இது  மீத்தேன் திட்டத்தை கைவிடும் நடவடிக்கையின் முதல் கட்டம் என்று கூறப்படுகிறது. விரைவில் மீத்தேன் திட்டம் ரத்து என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது குறித்து அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் கூறும்போது, Òதமிழகத்தில் உள்ள  அரசியல் கட்சிகள் அனைத்தும் கடந்த ஜனவரி 28ம் தேதியன்று விவசாயிகள் நடத்திய  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கையெழுத்திட்டு  மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கைக்கு பலன்கிடைத்துள்ளது. விரைவில் மீத்தேன் திட்டம் ரத்து என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்Ó என்றார். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு  நிர்வாகி டாக்டர் பாரதிச்செல்வன் கூறுகையில், Òஅரசாங்கம் இனி காவிரி படுகையில் மீத்தேன்திட்டம் செயல்படுத்தமாட்டோம் என்று அறிவிக்கவேண்டும்Ó என்றார்.

விவசாயிகளுக்கு பாதிப்பு? : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை:

திருவாரூரில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தஞ்சை டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரை இன்னொரு பிரச்னை மீத்தேன் வாயு பிரச்னை.  இதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. எந்த ஒரு நிறுவனமும் தொழில் தொடங்க வரும்போது மாநில அரசுடன் முதலில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும்.அதன் பிறகு அந்த நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும். அந்த பகுதி மக்களின் கூட்டத்தை கூட்டி கருத்தறிய வேண்டும்.  இவை எல்லாம் நடந்தால் தான் அங்கு தொழில் தொடங்க முடியும்.  இவை நடக்கும் முன் இப்போது ஆட்சி மாறி அதிமுக ஆட்சிக்கு வந்து விட்டது. மீத்தேன் திட்டத்தின் மூலம் விவசாய நிலத்திற்கு  பாதிப்பு வந்தால் திமுக பார்த்துக்கொண்டிருக்காது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka