வெள்ளி, 20 மார்ச், 2015

திருத்துறைப்பூண்டியில் குடிநீர் விழிப்புணர்வு பேரணி


தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் நேற்றுமுன்தினம் துவங்கி வரும் 28ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதையொட்டி விழிப்புணர்வு பேரணி திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் நடைபெற்றது. குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் வசந்தகுமார் தலைமை வகித்தார். உதவி நிர்வாக பொறியாளர் சித்தார்த்தன் வரவேற்றார்.  ஒன்றியகுழு தலைவர் வேதநாயகி சிங்காரவேலு, நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி பேரணியை துவக்கி வைத்தனர். பேரணி சன்னதி தெருவில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக புதிய பஸ் நிலையம் வரை சென்றது. நகராட்சி ஆணை யர் குருசாமி, பொறியாளர் ராஜகோபால் மற்றும் மகளிர் சுயஉதவிகுழுவினர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் ஊராட்சியில் குடிநீர் பாதுகாப்பு மற்றும் பரிசோதனை பயிற்சி முகாம் நடைபெற்றது.  ஒன்றியகுழுத்தலைவர் தமிழரசன் துவக்கி வைத்தார். உதவி பொறியாளர் பழனி வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  நகராட்சி அலுவலகத்தில் புறப்பட்ட பேரணியை சப்கலெக்டர்  துவக்கி வைத்தார்.  நகர்மன்ற தலைவர் பவானிசீனிவாசன்,  ஆணையர் ஜெக தீசன், தாசில்தார் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் தனியார் நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர்.  

வேதாரண்யத்தில் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரத்தையெட்டி பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  ராஜாஜி பூங்காவிலிருந்து துவங்கிய பேரணியை எம்எல்ஏ காமராஜ்  துவக்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் சுசீலாதேவிசரவணன்,வழக்கறிஞர் நமசிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி மேலவீதி, வடக்குவீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. நீரின் அவசியம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. 

மன்னார்குடியில் குடிநீர் விழிப்புணர்வு பேரணியை நகர்மன்ற தலைவர் சுதாஅன்புசெல்வன், ஒன்றியக்குழு தலைவர் உதயகுமாரி, துணைத்தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட் டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், உதவி தொடக்க கல்வி அலுவலர் புகழேந்தி, தமிழ்நாடு குடிநீர்வாடிகால் வாரிய உதவி பொறியாளர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka