வெள்ளி, 6 மார்ச், 2015

சம ஊதியம் வழங்க வேண்டும் ஜேக்டோ 8ம் தேதி ஆர்ப்பாட்டம்


திருத்துறைப்பூண்டி  தமிழ்நாடு ஆசிரியர் இயங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கன்னியாகுமரி மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினரும், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொரு ளாளர் திருத்துறைப்பூண்டி சரவணன் கூறியதாவது. ஜேக்டோ அமைப்பின் சார்பில் ஆறாவது ஊதியக்குழுவில் தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடுவண் அரசில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் போல் சமமாக வழங்கப்படவில்லை. மத்திய அரசு வழங்கியுள்ள தர ஊதியத்துடன் கூடிய ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். 2011 சட்டசபை  தேர்தல் பிரசாரத்தில் அதிமுக அளித்த வாக்குறுதிபடி அரசு தன்பங்களிப்பு ஓய்வு ஊதியத் திட்டத்தை நீக்கம் செய்து பழைய ஓய்வு ஊதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 

1986 முதல் 1988 வரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களையும், 2004 முதல் 2006 வரை தொகுப்பூதிய நியமனத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களையும் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்ப் பாடத்தை முதல் பாடமாக வைக்க வேண்டும். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 30 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, மற்றும் சிறப்பு நிலைகளுக்கு வழங்குவதைப் போன்று விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.  


அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பதிவுமூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் நிலை-1 நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka