திங்கள், 2 மார்ச், 2015

தண்டவாளத்தில் கற்கள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை





தண்டவாளத்தில் கற்கள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனி.விஜயா எச்சரிக்கை விடுத்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழக ரெயில்வே போலீஸ் துறை மற்றும் திருவாரூர் மாவட்ட போலீஸ் துறை சார்பில் ரெயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நீடா மங்கலத்தில் நடந்தது. நிகழ்ச் சிக்கு தென்னக ரெயில்வே ஊழியர் யூனியன் துணை பொது செயலாளர் மனோ கரன், துணை போலீஸ் சூப் பிரண்டுகள் அன்பழகன், குணசேகரன், ரெயில்வே பாது காப்பு படை துணை போலீஸ் சூப்பிரண்டு தனவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனி.விஜயா, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதா வது:-

ஆசிரியர்களின் கடமை

தண்டவாளத்தில் கற்களை வைத்து விளையாடும் இளை ஞர்கள் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கிறோம் என்பதை உணர வேண்டும். ரெயில், தண்டவாளம் ஆகி யவை தொடர்பாக இளைஞர் களுக்கு போதிய அளவு விழிப் புணர்வு இல்லை. பள்ளி ஆசி ரியர்கள் மாணவர்களுக்கு ரெயில்வே போக்குவரத்து பற்றியும், அதன் விதிமுறைகள் பற்றியும் விளக்கம் அளிப்பது சமுதாய கடமை.

நீடாமங்கலம், மன்னார்குடி, அம்மாபேட்டை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகள் வழியாக செல்லும் ரெயில் தண்டாவளங்களின் பாது காப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம். தண்டவாளத்தில் கற்களை வைப்பது போன்ற குற்ற செயல்களை செய்து வழக்குகளில் சிக்கினால் இளைஞர்கள் அரசு பணிக்கு செல்ல முடியாது. நீடாமங்கலம் என்றால் தண்டவாளத்தில் கற்களை வைப் பார்களே அந்த நீடாமங் கலமா? என பேசும் நிலை இனி இருக்க கூடாது. தண்ட வாளத்தில் கற்கள் வைப்பது, ரெயில் போக்குவரத்துக்கும், பயணிகளுக்கும் இடையூறாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மிகப்பெரிய தண்டனைக்கு ஆளாவார்கள்.

இவ்வாறுஅவர் கூறினார்.

வழக்குகள்

நிகழ்ச்சியில் ரெயில் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுத் துபவர்கள் மீது என்ªன்ன வழக்குகள் போடப்படும் என் பது குறித்து பொதுமக்களுக்கு ரெயில்வே போலீசார் விளக் கம் அளித்தனர்.

இதில் திருவாரூர் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ் பெக்டர் குருசாமி, பேரூராட்சி துணை தலைவர் செந்தமிழ்ச் செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. சோமசுந்தரம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜ சேகரன், வர்த்தகர் சங்க முன் னாள் தலைவர் கமாலுதீன், பேரூராட்சி உறுப்பினர் ராஜன்ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக ரெயில்வே போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வரவேற்றார். முடிவில் ரெயில்வே பாது காப்பு படை அதிகாரி மோகன வடிவேல் நன்றி கூறினார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka