வெள்ளி, 6 மார்ச், 2015

உணவு பயிர்கள் சேதமாவதை தடுக்க நடவடிக்கை கலெக்டர் மதிவாணன் தகவல்

எலிகளால் உணவு பயிர்கள் சேதமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மதிவாணன் கூறினார்.

பயிற்சி முகாம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கான உணவு பயிர்களுக்கு சேதம் விளை விக்கும் எலிகளை கட்டுப் படுத்துவது குறித்த பயிற்சி முகாம் நடை பெற்றது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

வேளாண்மை தொழில்நுட்ப முகமையின் நிதியை கொண்டு வயல்களில் எலிகளை கட்டுப் படுத்தும் பயிற்சி நடக்கிறது. இந்த முகாமில் முதல் கட்டமாக நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 80 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

எலிகளால் சேதம்

வயல்களில் எலிகளின் எண் ணிக்கை அதிகமானால் உணவு பயிர்களுக்கு சேதம் ஏற்படும். மேலும் எலிகள் கடித்த உணவு பயிர்கள், எலி கள் நடமாடிய தண்ணீர் ஆகி யவற்றின் மூலமாக பிளேக், லெப்டோபஸ்ரோசிஸ், சால்மனோலோசிஸ் உள்ளிட்ட கொடி நோய்கள் பரவும்.

இதை தடுப்பதற்காக விவ சாயிகளுக்கு பயிற்சி அளிக் கப்படுகிறது. இந்த முகாமில் வயல்களில் எலிகளின் நட மாட்டத்தை கண்டறியும் முறை, அழிக்கும் முறை குறித்து நேரடியாக விளக்கம் அளிக்கப்படும். இதன் மூலமாக உணவு பயிர்களில் ஏற்படும் சேதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இது உணவு உற்பத்தியை அதிகரிக்கும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கையேடு வெளியீடு

முன்னதாக வயல்களில் எலிக்கட்டுப்பாடு குறித்த கையேட்டை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.

நிகழ்ச் சியில் வேளாண்மை இணை இயக்குனர் மயில் வாகணன், வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் காமராஜ், உதவி இயக்குனர் இளஞ்செழியன், நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka