மன்னார்குடி அருகே திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மாணவியை கடத்திச் சென்ற காதலனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து, மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கோட்டூர் காவல் சரகத்திற்கு உள்பட்ட மேலபனையூர் கீழத்தெரு,சுந்தரமூர்த்தி மகன் ரவிச்சந்திரன்(26) பொறியியல் பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். ரவிச்சந்திரன், நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். ரவிச்சந்திரனும், பிளஸ்-2 படித்து வரும் மாணவியும் காதலித்து வந்தனராம்.
இந்நிலையில் சென்ற ஜுன் 1-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியை காணவில்லை என்றும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ரவிச்சந்திரன் கடத்திச் சென்றுவிட்டதாக மாணவியின் பெற்றோர் கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனராம். அதனை அடுத்து கோட்டூர் காவல் ஆய்வாளர் லெட்சுமி தலைமையில் தனிப்படை போலீஸார் தேடிவந்த நிலையில் குமாரப்பாளையத்தில் தலைமறைவாக இருந்த ரவிச்சந்திரனை வியாழக்கிழமை இரவு போலீஸார் கைது செய்து கடத்தி வைத்திருந்த மாணவியை மீட்டனர்.
பின்னர் மாணவிக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்த பின் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸார், ரவிச்சந்திரனை மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக