திருவாரூர் : மத்திய அரசின் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் வீடு கட்டுவதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார். நகர்புற மேம்பாட்டிற்காக மாவட்ட அளவிலான ஏழை மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மத்திய அரசால் அனைவருக்கும் வீட்டு வசதி வழங்கும் வகையில் பாரத பிரதமரின் வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகளில் வசிக்கும் தகுதி வாய்ந்த பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் கடனுடன் கூடிய வட்டி மானியமாக ரூ.3 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருவாய் உள்ள பிரிவினருக்கு 6.5 சதவீதத்துக்கு மேற்படும் வட்டிக்கு மானியத்துடன் அதிகப்பட்சமாக 323 சதுரஅடி பரப்பளவிலும், ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருவாய் உள்ள பிரிவினருக்கு 646 சதுரஅடி பரப்பளவு கொண்ட வீடும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் கூத்தாநல்லூர் நகராட்சிகளின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் தகுதியுள்ளவர்கள் சம்மந்தப்பட்ட நகராட்சி ஆணையரை தொடர்புகொண்டு உரிய படிவத்தில் குறிக்கப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை கலெகடர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக