திருவாரூரில் புதன்கிழமை பெண்ணிடம் நகையைப் பறித்துக் கொண்டு தப்பியோடிய இளைஞரை பொது மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருவாரூர் விளமல் பகுதியைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மனைவி கமலாம்பாள் (60). இவ புதன்கிழமை வெளியூர் செல்வதற்காக திருவாரூர் பேருந்து நிலையத்துக்கு வந்து, மன்னார்குடி பேருந்தில் ஏறும் போது இளைஞர் ஒருவர் ரூ. 60,000 மதிப்புள்ள 3 தங்கச் செயின் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்து கமலாம்பாள் கூச்சலிட்டதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் தப்பியோடிய இளைஞரை பிடித்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில் நகையை திருடி தப்பியோடியவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்துவேலியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் வெங்கடேசன் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து நகையை மீட்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக