திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டார விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனுவை முன்னாள் எம்எல்ஏ கே.உலகநாதன் வெள்ளிக்கிழமை துணை வட்டாட்சியரிடம் வழங்கினார்.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் ஆண்டிற்கு 200 நாள்கள் வேலை வழங்கி ரூ.400 ஊதியம் வழங்க வலியுறுத்தல், தலித் ஆதிவாசிகள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தல், கெளரவ கொலைகளைத் தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல், விவசாயத் தொழிலாளர்களுக்கு தனி ஓய்வூதியச் சட்டம் இயற்றி ரூ.3000 வழங்க வலியுறுத்தல், நிலமற்ற ஏழை குடும்பங்களுக்கு 5 சென்ட நிலம் வழங்கி ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடு கட்டித்தரக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணை வட்டாட்சியர் மூலம் பிரதமருக்கும், முதல்வருக்கும் அனுப்பக்கோரி மனு அளிக்கப்பட்டது.
கே.உலகநாதனுடன் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர்கள் அ.பாஸ்கர், கே.முருகையன், நகர செயலர் எம்.முருகேசன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் எல்.பக்கிரிசாமி, ஏ.மூர்த்தி, ஆர்.வாசுதேவன், பி.காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

0 கருத்துகள்:
கருத்துரையிடுக