முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியாவிலேயே மிகப்பெரிய காடாகும். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் துவங்கி நாகை மாவட்டத்தில் முடியும் இந்த அலையாத்தி காடுகள், 120 கிலோ மீட்டர் தூரம் பரப்பளவில் பரந்து விரிந்து வளர்ந்து கம்பீரமாக காணப்படுகிறது. 2004 சுனாமியின்போது முதலில் இந்த அலையாத்தி காட்டை தான் சுனாமி தாக்கியது. இங்கு அமைந்துள்ள அலையாத்தி காட்டால் முத்துப்பேட்டை பகுதி மக்கள் தப்பினர். மேலும் பலவகையான தாவர செடிகள் மற்றும் விதவிதமான ஆயிரக்கணக்கான இன பறவைகள் இங்கு ஒரே இடத்தில் காணப்படுவதால் இதனை காண இந்தியாவில் பல பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்த காட்டின் பல பகுதிகளில் தேனீக்களின் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் முகாமிடும் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா வரும் பயணிகளை தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேனீக்கள் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் நல்ல தண்ணீர்களை கண்டால் அதில் மொய்க்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள், தேனீக்களிடமிருந்து தப்பிக்க குடிநீர்களை சிறிய தட்டிலோ டம்ளரிலோ ஊற்றி வைக்கின்றனர். அந்த தண்ணீரில் தேனீக்கள் மொய்க்கிறன. அந்த நேரங்களில் பயணிகள் சமார்த்தியமாக தப்பிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது அலையாத்தி காடுகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைய துவங்கியுள்ளன. இதனால் அலையாத்தி காடுகளில் முகாமிட்டுள்ள தேனீக்களை கட்டுப்படுத்த முத்துப்பேட்டை வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை
வி டுத்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக