மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு கோரி, திருவாரூர் மாவட்டத்தில் இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மருத்துவமனைப் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மருத்துவமனையில் பணியின் போது ஏற்படும் பிரச்னைகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியே மருத்துவர்கள் மீது வழக்குப்பதிய வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சனிக்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என இந்திய மருத்துவக் கழகம் முடிவு செய்தது. இதன்படி, திருவாரூர் நகரத்தில் 30-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்பட மாவட்டத்தில் 50 பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் 150 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. எனினும், உள்நோயாளிகளுக்கானசேவையில் பாதிப்பில்லை.மாவட்டத்தில் தனியார் மருத்து வர்கள் மேற்கொண்ட இந்த போராட்டத்துக்கு அரசு மருத்துவர் கள் ஆதரவு தெரிவித்து, கருப்பு பட்டை அணிந்து பணியாற் றினர்.
திருத்துறைப்பூண்டியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு முழுமையாக செயல்படவில்லை. உள்நோயாளிகள் பிரிவு மற்றும் அவசர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக