எடையூர் அருகே திருமணமான 2 மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பெண்ணின் கணவர் உள்பட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, பெண்ணின் மாமனாரை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் சரகம் குன்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் பிரியதர்ஷினி (25). எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கும், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த கரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் தமிழ்மணி (30)க்கும் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தமிழ்மணி சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.
திருமணமான சில நாட்களில் தமிழ்மணி ஏற்கெனவே பட்டுக்கோட்டை அருகேயுள்ள முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதும், அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளதும் பிரியதர்ஷினிக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது அவர் சரியான பதில் கூறவில்லையாம்.
இதில் மனமுடைந்த பிரியதர்ஷினி மே 1ஆம் தேதி குன்னலூரில் தனது தகப்பனார் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயபால் எடையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
மன்னார்குடி கோட்டாட்சியர் செல்வசுரபி, உறவினர்களிடம் விசாரணை நடத்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்மணி, அவரது தந்தை ஜெயராமன், தாய் ராஜேஸ்வரி ஆகியோர் மீது பிரியதர்ஷினியைத் தற்கொலைக்கு தூண்டியதாக எடையூர் போலீஸார் வழக்கு பதிந்தனர்.
இவர்களில் ஜெயராமனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். ராஜேஸ்வரி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் கைது செய்யப்படவில்லை.
மேலும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்ட தமிழ்மணி நாடு திரும்பியவுடன் கைது செய்யப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக