திருவாரூர் மாவட்டத்தில் 8 லட்சம் வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரங்களை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. திருவாரூர் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆய்வு செய்த பின்னர் ஆட்சியர் கூறியது:
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து ஆதார் எண், செல்பேசி எண் மற்றும் இ-மெயில் விவரங்களை பெற்று வாக்காளர் பட்டியில் இணைத்து வருகின்றனர்.
இதுவரை இந்த விவரங்களை அளிக்காதவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 3-வது சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 9,53,352 வாக்காளர்களில் 8,17,000 வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்கள் பெறப்பட்டுள்ளன என்றார் மதிவாணன்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக