திருத்துறைப்பூண்டி, : கடலூரில் நடந்த மாநில கராத்தே போட்டியில் திருத்துறைப்பூண்டி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கடலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கிராமப்புற விளையாட்டுக் கழகம் சார்பில் நடந்த கராத்தே போட்டியில் திருத்துறைப்பூண்டி முத்தூஸ் கராத்தே மற்றும் கோபுடோ பள்ளி மாணவர்கள் தலைமை பயிற்சியாளர் முத்துக்குமரன் தலைமையில் 19 பேர் கலந்து கொண்டனர். அதில் 13 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். கட்டா மற்றும் குமித்தே பிரிவில் நிரஞ்சன், சந்தியா, மாசிலா ஏசு, தங்க பதக்கம் வென்றனர். ஜெயரிஷிதரன், வினோதினி, ரிஷியங்கா, சிலம்பரசன், சிரஞ்சீவி, ரன்வீர் ஆகிய மாணவர்கள் வெள்ளி பதக்கம், கார்த்திக், புஷ்பகாமினி, பவித்ரன், ராஜேஷ் ஆகிய மாணவர்கள் வெண்கல பதக்கம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் ஒலிம்பிக் வீரர் ஜான் வில்லியம் பிரான்ஸிஸ், ஜெனரல் செயலாளர் மகேஷ்பாபு ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். பயிற்சியாளர் மகேந்திரன், கருணாகரன், முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் பரிசு வென்ற 3 மாணவர்கள் டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக