புதன், 6 மே, 2015

பிராண்டு...

பிராண்டட் பொருட்களின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தை புரிந்துகொள்ள முடியாது. பொருளின் மதிப்பைவிட அதிகமான தொகையைத்தான் கொடுக்கிறோம் என்று தெரிந்துகொண்டே பிராண்டட் பொருட்களுக்கு அதிக விலை கொடுக் கிறோம். ஏனென்றால் பிராண்டட் பொருட்கள் என்றால் தரமாக இருக்கும் என்கிற நம்பிக்கை. தனி அந்தஸ்தை கொடுக்கும் சில பிராண்டுகளுக்கும் அதிக விலை கொடுக்கத்தான் செய்கிறோம்.

அதே சமயத்தில் பிராண்டட் அல்லாத பொருட்களும் சந்தையில் முக்கிய பங்கை வகிக்கத்தான் செய்கின்றன. பிராண்டட் பொருட்களுக்கு ஈடான அதே தரத்தை பிராண்டட் அல்லாத பொருட்களிலிருந்தும் பெற முடியும். பெரிய நிறுவனங்கள் தங்களது பிராண்டை உருவாக்க கோடி கோடி யாக செலவு செய்து மக்களிடம் நம்பிக் கையைப் பெறுகிறார்கள். அதற்காகும் செலவுகளை பொருட்களின் விலையை ஏற்றுவதன் மூலம் சரிசெய்து விடுகிறார்கள். கோடிகளில் விளம்பரம் செய்யப்படாத பொருட்கள் பிராண்டாக உருவாக முடியவில்லை என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். அதேசமயத்தில் பிராண்டட் பொருட்களை அப்படியே காப்பியடித்து போலியான பிராண்டுகளை உருவாக்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பிராண்டுக்கான விலையா

விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் பிராண்டட் பொருட்கள் என்றால் தரமாக இருக்கும் என்றுதான் மக்கள் நம்பி வாங்குகிறார்கள். இதே தரம் பிராண்ட் அல்லாதவற்றிலோ அல்லது பிற தயாரிப்புகளிலோ கிடைக்குமா என்றால் உறுதியாக சொல்ல முடியாது என்கிறார்கள் பிராண்டிங் ஆய்வாளர்கள்.

அன்பிராண்ட் தயாரிப்புகளாக வந்த ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு குறியீடுகள் இல்லை என்று அரசே தடை செய்துள்ளதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். காலணிகள் விற்பனையில் பெரிய சந்தை மதிப்பை கொண்டிருந்த முன்னணி பிராண்ட் கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் போட்டிகள் அதி கரித்தது மட்டுமல்ல, அந்த பிராண்டுக்கு கொடுக்கும் விலை யில், தரமான தயாரிப்பை போட்டி யாளர்களும் கொடுக்கத் தொடங்கி விட்டனர். எனவே பிராண்டை கண்ணை மூடிக்கொண்டு மக்கள் வாங்குவார்கள் என்றும் நினைக்க தேவையில்லை.

எனவே பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகள் அனைத்தும் தரமாக இருக்கும் என்றோ, வளர்ந்து வரும் நிறுவனங்களின் தயாரிப்புகள் தரமற்றவை என்றோ புரிந்து கொள்ளக் கூடாது. பிராண்டுகளுக்கு கொடுக்கும் விலை அதன் தரத்திற்காக கொடுக்கும் விலையாக பார்க்காமல் மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான விலை யாகத்தான் பார்க்க வேண்டும். எனவே பிராண்டட் அல்லாத பொருட்கள் மீது மோசமான பார்வையும் வேண்டாம் என்பது பிராண்டிங் ஆய்வாளர்கள் கருத்து.

பிராண்டட் பொருட்களோ பிராண்ட் அல்லாத பொருட்களோ நமது தேவைக்கு ஏற்ப தேடிப்பிடித்து வாங்குவதே பயன் தரும் என்பது அனுபவப்பட்ட வர்களின் ஆலோசனையாக இருக்கிறது.

மின் சாதனங்கள்

வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவது பிராண்டட் பொருட்கள்தான். பிராண்ட் மதிப்பு இல்லாத பொருட்கள் விற்பனை மந்தமாகத்தான் இருக்கிறது என்கின்றனர் விற்பனையாளர்கள். ஆனால் பிராண்டட் நிறுவனத்தின் விலையில் அதே தரத்திலான இதர நிறுவனங்களின் தயாரிப்புகளை விலை குறைவாகவே வாங்கிவிட முடியும் என்கிறார்கள்.

எல்இடி டிவி, வாஷிங்மெஷின், குளிர்சாதன பெட்டி மற்றும் ஏசி வகைகளில் இந்த விலை வித்தியாசத்தை பார்க்கலாம். இவற்றில் போலிகளை உருவாக்க முடியாது. தரத்துக்கு ஏற்ப விற்பனைக்கு பிறகான சேவை, வாரண்டி, கியாரண்டி உத்திரவாதங்கள், பிரச்னை ஏற்பட்டால் வீட்டுக்கே வந்து சர்வீஸ் செய்து கொடுக்கும் வசதிகள் கிடைப்பதை பொறுத்து பிராண்டாக உருவாகாத நிறுவனங்களின் தயாரிப்புகளை இந்த வகைகளில் தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்கள்.

அதேநேரத்தில் சிறிய ரக வீட்டு உபயோகப் பொருட்களான மிக்ஸி, பேன், மைக்ரோவேவ் அவன், இஸ்திரி பெட்டி போன்றவற்றில் பிராண்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த வகையிலான சிறு தயாரிப்புகள் அனைத்தும் அவுட் சோர்ஸிங் முறையில் சீன தயாரிப்புகளாக இருக்கும். எனவே இவற்றில் பிராண்ட் அல்லாத தயாரிப்புகளை நாடவேண்டாம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

மின் பொருட்கள்

மின் சாதனங்களை விட மின் பொருட்கள் வாங்குவதில் (எலெக்ட் ரிக்கல்) அறிமுகமில்லாத ரகங்களை நாடுவது பாதுகாப்பு கிடையாது. பிராண்டட் நிறுவனங்கள் அரசின் தர அளவீடுகள்படி தயாரிப்புகளை சந்தைப் படுத்துவார்கள். ஏனென்றால் தரத்தில் சிறிய குறை இருந்தாலும் சந்தையில் அவர்களது பிராண்ட் மதிப்பை இழக்கக்கூடும். தவிர ஐஎஸ்ஐ போன்ற தரச்சான்று நிறுவனங்களின் பாதுகாப்பு விதிமுறைகள்படி தயாரிப்புகள் இருக்கும். எனவே இது போன்ற பொருட்களை வாங்குகிறபோது பிராண்டுகளுக்கான விலையை யோசிக்கக்கூடாது. விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக அறிமுகமில்லாத நிறுவனப் பொருட்களில் முயற்சி எடுக்க வேண்டாம்.

உணவுப் பொருட்கள்

உணவுப் பொருட்கள் சந்தையில் பிராண்டுகள் மட்டுமல்ல, போலி பிராண்டு களின் ஆதிக்கமும் நிறைந்துள்ளது. புகழ் பெற்ற பிராண்டுகளின் பெயரைப் போலவே எழுத்துக்களை ஒன்றிரண்டு மாற்றி கண்டுபிடிக்க முடியாதபடி டூப்ளி கேட்டுகளும் இருக்கும். ஒரிஜினல் பிராண்டின் எழுத்துக்கள் நன்றாக மனதில் பதிந்தால்தால் தப்பிக்க முடியும்.

பல ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனங்களின் பிஸ்கட்டுகள், பால், சாக்லேட், குளிர்பானங்கள் போன்றவை தரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவை.

இவை பல ஆண்டுகளாக இருப்பதால் நம்பிக்கை யோடு வாங்கலாம். ஆனால் போலி பிராண்டுகள் நமது உடல்நலத்துக்கு கேடு கொண்டுவரலாம். போலிகள் மட்டுமல்ல பிராண்ட் அல்லாதவைகளும் சில நேரங்களில் சிக்கல்தான். இந்த துறையில் பெரிய நிறுவனங்களின் பிராண்டுகள் தவிர உள்ளூர் அளவிலான பிராண்டுகளும் நல்ல பெயர் வாங்கியிருக்கும் அதையும் கவனிக்க வேண்டும்.

இதுதவிர பெரிய நிறுவனங்கள் பெயரில் அவர்களுக்கு சம்மந்தமே இல்லாத துறைகளில் போலி பிராண்டுகளும் சந்தையில் உள்ளது. பெரிய நிறுவன தயாரிப்புதானே என்று நம்பி வாங்குவதும் நடக்கும்.

மேலே கொடுக்கப்பட்டவை சில அடிப்படையான விஷயங்கள்தான். பிராண்ட் மோகத்தில் எதையும் ஆரா யாமல் வாங்குபவர்களுக்கான சில ஆலோசனைகள்தான். பிராண்டே உயர்ந்தது என்று நினைத்து, அதிக பணம் கொடுக்கவும் தேவையில்லை., இளக்காரமாக நினைத்து அன்பிராண்ட் பொருட்களை புறக்கணிக்கவும் தேவையில்லை.

தரம், நீண்ட நாள் உழைக்கும் தன்மை, வாடிக்கையாளர் நன்மதிப்பு, பாதுகாப்பு, உடல்நலம் இவற்றின் அடிப்படையில் போலி பிராண்டுகளை புறக்கணிக்கும் அதேவேளையில் முன்னணி பிராண்ட் என்பதற்காகவே நமது பணத்தை கொட்டிக் கொடுக்கவும் தேவையில்லை. தரமான பொருளை தேடிப்பிடித்து வாங்க வேண்டியது நுகர்வோரின் பொறுப்பு என்பதைப் புரிந்து கொள்வோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka