ஞாயிறு, 31 மே, 2015

திருமணமான 2 மாதத்தில் இளம் பெண் தற்கொலை

எடையூர் அருகே திருமணமான 2 மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பெண்ணின் கணவர் உள்பட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, பெண்ணின் மாமனாரை கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் சரகம் குன்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் பிரியதர்ஷினி (25). எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கும், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த கரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் தமிழ்மணி (30)க்கும் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தமிழ்மணி சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.

திருமணமான சில நாட்களில் தமிழ்மணி ஏற்கெனவே பட்டுக்கோட்டை அருகேயுள்ள முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதும், அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளதும் பிரியதர்ஷினிக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது அவர் சரியான பதில் கூறவில்லையாம்.

இதில் மனமுடைந்த பிரியதர்ஷினி மே 1ஆம் தேதி குன்னலூரில் தனது தகப்பனார் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயபால் எடையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

மன்னார்குடி கோட்டாட்சியர் செல்வசுரபி, உறவினர்களிடம் விசாரணை நடத்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்மணி, அவரது தந்தை ஜெயராமன், தாய் ராஜேஸ்வரி ஆகியோர் மீது பிரியதர்ஷினியைத் தற்கொலைக்கு தூண்டியதாக எடையூர் போலீஸார் வழக்கு பதிந்தனர்.

இவர்களில் ஜெயராமனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். ராஜேஸ்வரி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் கைது செய்யப்படவில்லை.

மேலும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்ட தமிழ்மணி நாடு திரும்பியவுடன் கைது செய்யப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நெல் திருவிழா

 திருத்துறைப்பூண்டி அருகே, ஆதிரெங்கம் இயற்கை வேளாண் மற்றும் பயிற்சி மையத்தில், நமது நெல்லை காப்போம் கிரியேட் சார்பில், தேசிய அளவிலான நெல் திருவிழா மற்றும் பாரம்பரிய விதை நெல் வழங்கும் விழா நடைபெற்றது.
கிரியேட் சேர்மன் துரைசிங்கம் தலைமை வகித்தார். ஆதிரெங்கம் ஊராட்சி தலைவர் அப்துல்முனாப் முன்னிலை வகித்தார்.
நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் வரவேற்றார்.
நெல் திருவிழாவில், மாநில திட்ட கமிஷன் துணை தலைவர் சாந்தா ஷீலா நாயர், விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கி பேசியதாவது:
நமது பாரம்பரிய நெல்லை பாதுகாத்து வருவது தான், இரண்டாவது பசுமை புரட்சி. நாற்பது ஆண்டுகளுக்கு முன், திண்டுக்கல்லில் சப்கலெக்டராக் இருந்த போது, பூச்சி மருந்து, ரசாயன உரம், உயர் ரக விதைகள் கொடுப்பது வேலையாக இருந்தது. இப்போது, இரண்டாவது பசுமை புரட்சியில், பூச்சி மருந்து வேண்டாம், என்றும் பாரம்பரிய நெல் ரகங்களை திருப்பி கொண்டு வாருங்கள், என்றும் சொல்கிறோம்.
கடந்த, 2006ல், பத்து ரகங்கள் வைத்து துவங்கி, 80 ஆயிரம் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை விரிவுபடுத்தி இருக்கிறீர்கள். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பது போல், சிறு தானியங்களையும் பாதுகாக்க வேண்டும்.
தர்மபுரியில் சிறுதானிய உற்பத்தி செய்யும் விவசாயிகள், குழு அமைத்து, கலெக்டர் மூலம், திட்டக் கமிஷனை அணுகினால், திட்ட கமிஷன் ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட கலெக்டர் மதிவாணன், திருவனந்தபுரம் தேசிய ஒருங்கிணைப்பாளர் உஷாகுமாரி, மாநில ஒருங்கிணைப்பாளர் கேரளா ஸ்ரீதர், தமிழக இயற்கை உழவர் இயக்க தலைவர் அம்பலவாணன், தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை கூடுதல் துணை இயக்குனர் சங்கரலிங்கம் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேரன், ஜிடி பவுன்டேசன் டாக்டர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிரியேட் நிர்வாக அறங்காவலர் பொன்னம்பலம் நன்றி கூறினார்.

புதன், 13 மே, 2015

பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை:மூன்று தனிப்படைகள் அமைப்பு



திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே பெட்ரோல் பங்க உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முத்துப்பேட்டை காவல் சரகம் உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வி.பி.எஸ். வெங்கடேசன் (27). பொறியியல் பட்டதாரியான இவர் பா.ஜ.க. கிளை நிர்வாகியாக இருந்து வந்தார். இவர் அதே ஊரில் கிழக்கு கடற்கரை சாலையில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார்.

திங்கள்கிழமை இரவு வெங்கடேசன் பெட்ரோல் பங்கில் தனியாக இருந்தபோது சித்தமல்லி ப. விஜி. தோலி கிராமத்தைச் சேர்ந்த அ. மருதுபாண்டியன் மற்றும் அடையாளம் தெரியாத இருவர் என நான்கு பேரால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் இரு சக்கர வாகனத்தில் தப்பி விட்டனர்.

நண்பரின் காதலுக்கு உதவியதால் இவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் (கூ.பொ) கணேசன் மேற்பார்வையில், நன்னிலம் காவல் ஆய்வாளர் பெரியசாமி, திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் ராஜா, முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


திங்கள், 11 மே, 2015

32 ஆண்டுகளுக்கு பிறகு பழைய நினைவுகள்...

திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
Image result for get together
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியிலுள்ள ஜானகி அண்ணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1982-1983 ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்கள், மாணவிகள் அனைவரும் ஒன்றாக சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பல்வேறு அரசு, தனியார் நிறுவனங்களில் பல்வேறு பதவிகளில் வகித்து வருவதுடன், பலர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர்.

முன்னதாக, பழைய மாணவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தவிர குடும்ப உறவுகள், பணியாற்றும் விவரம், கடந்து வந்த வாழ்க்கை பாதை குறித்து ஒருவருக்கொருவர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் தமிழரசன், தட்சிணாமூர்த்தி, ரெங்கநாதன் ஆகியோர் பழைய மாணவர்களுடன் இணைந்து நலம் விசாரித்து வாழ்க்கை முன்னேற்றத்துக்கு ஆலோசனை தெரிவித்தனர்.

அப்போது, மாணவர்களும் பள்ளிக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆசிரியர்களிடம் கூறி நினைவுகளை பரிமாறிக்கொண்டு பள்ளி முன்பாக அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டு, பழைய மாணவர்களின் சார்பாக இனி ஆண்டுதோறும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குவதெனவும், ஆண்டுதோறும் இந்த சந்திப்பை கூடுதல் மாணவர்களுடன் நடத்துவதெனவும் முடிவெடுத்துக்கொண்டனர்.

ராமசுப்ரமணியன், வெங்கட்ராமன் ஆகியோர் தலைமையில் பழைய மாணவர்களை ஒருங்கிணைத்தனர். முன்னாள் மாணவர் பக்கிரிசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

திருவாரூர் மாவட்டத்தில் 8 லட்சம் வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைப்பு

Image result for aadhaar cardதிருவாரூர் மாவட்டத்தில் 8 லட்சம் வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரங்களை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. திருவாரூர் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆய்வு செய்த பின்னர் ஆட்சியர் கூறியது:

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து ஆதார் எண், செல்பேசி எண் மற்றும் இ-மெயில் விவரங்களை பெற்று வாக்காளர் பட்டியில் இணைத்து வருகின்றனர்.

இதுவரை இந்த விவரங்களை அளிக்காதவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 3-வது சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 9,53,352 வாக்காளர்களில் 8,17,000 வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்கள் பெறப்பட்டுள்ளன என்றார் மதிவாணன்.

திருத்துறைப்பூண்டியில் ஜமாபந்தி நிகழ்ச்சி

 திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள 77 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி  தாலுகா அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. பட்டா மாறுதல், குடும்ப அட்டை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்டவை கேட்டு துணை கலெக்டர் அசோகனிடம்  தினந்தோறும் பொதுமக்கள் மனு கொடுத்து வருகின்றனர்.  உரிய நடவடிக்கை எடுத்து அன்றைய தினமே தகுதியான மனுக்களுக்கு ஆணை வழங்கப்படுகிறது. ஜமாபந்தியில் தாசில்தார் அன்புமணி, தனி தாசில்தார்கள் மலர்க்கொடி, ரெங்கசாமி, வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரவடிவேலு, துணை தாசில்தார் அன்பழகன், செந்தில்குமார், வசுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அலையாத்தி காட்டில் தேனீக்கள்

முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
Image result for beeதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியாவிலேயே மிகப்பெரிய காடாகும். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் துவங்கி நாகை மாவட்டத்தில் முடியும் இந்த அலையாத்தி காடுகள், 120 கிலோ மீட்டர் தூரம் பரப்பளவில் பரந்து விரிந்து வளர்ந்து கம்பீரமாக காணப்படுகிறது. 2004 சுனாமியின்போது முதலில் இந்த அலையாத்தி காட்டை தான் சுனாமி தாக்கியது. இங்கு அமைந்துள்ள அலையாத்தி காட்டால் முத்துப்பேட்டை பகுதி மக்கள் தப்பினர். மேலும் பலவகையான தாவர செடிகள் மற்றும் விதவிதமான ஆயிரக்கணக்கான இன பறவைகள் இங்கு ஒரே இடத்தில் காணப்படுவதால் இதனை காண இந்தியாவில் பல பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்த காட்டின் பல பகுதிகளில் தேனீக்களின் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் முகாமிடும் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா வரும் பயணிகளை தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேனீக்கள் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் நல்ல தண்ணீர்களை கண்டால் அதில் மொய்க்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள், தேனீக்களிடமிருந்து தப்பிக்க குடிநீர்களை சிறிய தட்டிலோ டம்ளரிலோ ஊற்றி வைக்கின்றனர். அந்த தண்ணீரில் தேனீக்கள் மொய்க்கிறன. அந்த நேரங்களில் பயணிகள் சமார்த்தியமாக தப்பிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது அலையாத்தி காடுகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைய துவங்கியுள்ளன. இதனால் அலையாத்தி காடுகளில் முகாமிட்டுள்ள தேனீக்களை கட்டுப்படுத்த முத்துப்பேட்டை வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை
வி டுத்துள்ளனர்.

அரசு கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி 19ம் தேதி ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, :  திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாணவர் பெருமன்றம் முடிவு செய்துள்ளது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஒன்றிய நகர  அனைந்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைந்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் போராட்ட அறிவிப்பு ஆலோசனை கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. அனைந்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். நகர செயலாளர் குமார், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் சிவசந்திரன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் பழனி முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் முருகேசு, துணை தலைவர் சுஜாதா, முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர். கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரிக்கு நிரந்திர கட்டிடம், விடுதி கட்டித்தர வேண்டும். கொருக்கை அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியே விடுதி கட்டித்தர வேண்டும். திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே உள்ள அரசு மாணவியர் விடுதியை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 19ம் தேதி திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சனி, 9 மே, 2015

மாநில கராத்தே போட்டியில் திருத்துறைப்பூண்டி மாணவர்கள் சாதனை

திருத்துறைப்பூண்டி, : கடலூரில் நடந்த மாநில கராத்தே போட்டியில் திருத்துறைப்பூண்டி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கடலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கிராமப்புற விளையாட்டுக் கழகம் சார்பில் நடந்த கராத்தே போட்டியில் திருத்துறைப்பூண்டி முத்தூஸ் கராத்தே மற்றும் கோபுடோ பள்ளி மாணவர்கள் தலைமை பயிற்சியாளர் முத்துக்குமரன் தலைமையில் 19 பேர் கலந்து கொண்டனர். அதில் 13 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். கட்டா மற்றும் குமித்தே பிரிவில்  நிரஞ்சன், சந்தியா, மாசிலா ஏசு, தங்க பதக்கம் வென்றனர். ஜெயரிஷிதரன், வினோதினி, ரிஷியங்கா, சிலம்பரசன், சிரஞ்சீவி, ரன்வீர் ஆகிய மாணவர்கள் வெள்ளி பதக்கம், கார்த்திக், புஷ்பகாமினி, பவித்ரன், ராஜேஷ் ஆகிய மாணவர்கள் வெண்கல பதக்கம் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் ஒலிம்பிக் வீரர் ஜான் வில்லியம் பிரான்ஸிஸ், ஜெனரல் செயலாளர் மகேஷ்பாபு ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். பயிற்சியாளர் மகேந்திரன், கருணாகரன், முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் பரிசு வென்ற 3 மாணவர்கள் டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

ஜோசி​யம் பார்ப்​ப​தா​கக் கூறி ​நகை பறிப்பு​

இடும்​பா​வ​னத்தை அடுத்த விளாங்​காடு கிரா​மத்​தைச் சேர்ந்த விவ​சாயி ஆர்.​ பாஸ்​கர் ​(45).​ இவர் சில நாட்​க​ளாக நோய்​வாய்ப்​பட்டு வீட்டி​லி​ருந்​தார்.​ செவ்​வாய்க்​கி​ழமை இவரை அணு​கிய இளை​ஞர் ஒரு​வர் தான் ஜோசி​யர் என அறி​மு​கப்​ப​டுத்​திக் கொண்டு பேசிக் கொண்​டி​ருந்​தார்.​ அப்​போது அங்கு வந்த பாஸ்​க​ரின் மனைவி சும​தி​யின் கழுத்​தில் இருந்த 5 பவுன் தங்​கச்​சங்கி​லி​யைப் பறித்​துக்​கொண்டு அவர் தப்​பி​னார்.​

இந்த சம்​ப​வம் குறித்த புகா​ரின் பேரில் முத்​துப்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்து வரு​கின்​ற​னர்.​

செயற்பொறியாளரை கைது செய்ய கோரிக்கை

அரசு அலுவலர் தற்கொலை வழக்கில் செயற்பொறியாளர் செந்தில்குமாரை கைது செய்ய கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பனை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (36) நன்னிலம் ஒன்றிய அலுவலகத்தில் பணிதள மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பணிச் சுமை அளித்து தொந்தரவு கொடுத்ததால், கடந்த மே 3-ம் தேதி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். கொரடாச்சேரி போலீஸார், முத்துக்கிருஷ்ணனின் மரண வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, செயற்பொறியாளர் செந்தில்குமார் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசு ஊழியாó சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக வளாóச்சித் துறை அலுவலாóகள் சங்க நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன் தற்கொலைக்கு காரணமான குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும், முத்துகிருஷ்ணன் தற்கொலைக்கு குடும்பத் தகராறு காரணம் என முத்துகிருஷ்ணன் குடும்பத்தினரிடம் பொய் வாக்குமூலம் பெற காவல்துறை முயற்சிப்பதாக மனு அளித்தனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் புஷ்பநாதன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

மே 9-ல் உம்​ப​ளச்​சேரி இனக் கால்​ந​டைக் கண்​காட்சி

கொருக்​கை​யில் மே 9-ல் உம்​ப​ளச்​சேரி இனக் கால்​ந​டைக் கண்​காட்சி நடை​பெ​ற​வுள்​ளது.​

இது​கு​றித்து மாவட்ட ஆட்​சி​யர் எம்.​ மதி​வா​ணன் வெளி​யிட்ட செய்​திக்​கு​றிப்பு:​ திருத்​து​றைப்​பூண்டி அருகே கொருக்கை அரசு பாலி​டெக்​னிக் கல்​லூ​ரி​யில் மே 9 காலை 9 மணிக்கு நடை​பெ​றும் கண்​காட்​சி​யில் பங்​கேற்​கும் உம்​ப​ளச்​சேரி இன தனித்​தன்மை மாறாத சிறந்த காளை மாடு மற்​றும் சிறந்த பசு​வி​னங்​க​ளுக்கு ரொக்​கப் பரிசு வழங்​கப்​பட உள்​ளது.​ முதற் பரிசு ரூ.​ 20,000 இரு நபர்​க​ளுக்​கும்,​​ 2-ம் பரிசு ரூ.​ 10,000 4 பேருக்​கும்,​​ 3-ம் பரிசு ரூ.​ 5,000 8 பேருக்​கும் ஆறு​தல் பரி​சாக தலா ரூ.​ 2,500 வீதம் 12 பேருக்கு வழங்​கப்​ப​டு​கி​றது.​ விவ​சா​யி​கள்,​​ கால்​நடை வளர்ப்​போர் தங்​க​ளி​டம் உள்ள உம்​ப​ளச்​சேரி இன கால்​ந​டை​களை கண்​காட்சி நடக்​கும் நாளன்று காலை 6 முதல் 8 மணிக்​குள் அழைத்து வந்து பதிந்து பயன்​பெ​ற​லாம்.​

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருத்துறைப்பூண்டி தூய தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கனகலெட்சுமி 1,170

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 83.08 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

மாவட்டத்தில் 64 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 3 ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகள், ஒரு நகராட்சி மேல்நிலைப் பள்ளி, 12 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், 2 பகுதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், 3 சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள், 20 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தமுள்ள 105 பள்ளிகளில் 2014-2015 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வில் 14,221 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். இதில் 11,815 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் முதல் மூன்று இடம்: மேலமரவாக்காடு தேவி மெட்ரிக் பள்ளி மாணவி ஆர். உமாமகேஸ்வரி 1,180 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், திருவாரூர் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. லெட்சுமி 1,178 மதிப்பெண் பெற்று 2-மிடம், மன்னார்குடி தூயவளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பி. அரசனகுமாரி 1,177 மதிப்பெண் பெற்று 3-மிடம் பெற்றார்.

அரசுப் பள்ளிகளில் முதல் மூன்று இடம்: மாவட்ட அளவில் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே. பரமேஸ்வரி 1,136 மதிப்பெண் பெற்று முதலிடம், பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சி. சங்கீதா 1,124 மதிப்பெண் பெற்று 2-மிடம், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம். ராமமூர்த்தி 1,120 மதிப்பெண் பெற்று 3-மிடம் பெற்றனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் திருவாரூர் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி லட்சமி 1,178 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம், மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பி. அரசன்குமாரி 1,177 மதிப்பெண் பெற்று 2-மிடம், திருத்துறைப்பூண்டி தூய தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கனகலெட்சுமி 1,170 மதிப்பெண் பெற்று 3-மிடம் பெற்றார்.

தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் மேலமரவக்காடு தேவி மெட்ரிக் பள்ளி மாணவி உமாமகேஸ்வரி 1,180 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மன்னார்குடி பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஏ. அரவிந்தன் 1,172 மதிப்பெண் பெற்று 2-மிடம், மன்னார்குடி சண்முக மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பிரவின் 1,166 மதிப்பெண் பெற்று 3-மிடம் பெற்றனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 78.84 சதவீத மாணவர்களும், 86.3 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2014-15 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 83.08 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த கல்வியாண்டில் 83.07 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

புதன், 6 மே, 2015

கட்டிமேடு எல்லைநாகலடி : கார் மோதி விவசாய தொழிலாளி சாவு

திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு எல்லைநாகலடியைச் சேர்ந்தவர் தையான் மகன் ராதா (45). செவ்வாய்க்கிழமை அதிகாலை டீ குடிப்பதற்காக கட்டிமேடு கடைத்தெருவுக்கு வந்த ராதா பிறகு அருகேயிருந்த மரக்கட்டையில் அமர்ந்திருந்தார். அப்போது வேதாரண்யத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற கார் ராதா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற ஆலோசனை கூட்டம்

திருத்துறைப்பூண்டி, : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில்  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற ஆலோசனை கூட்டம் பிஎஸ்ஆர் இல்லத்தில் நடைபெற்றது. தலைவர் கலைமகள் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆசிரியர் ராஜேந்தர், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆசிரியர் நேரு வரவேற்றார்.
கூட்டத்தில், எம்எல்ஏ உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர்கள் சந்திரராமன், ராஜா, ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன், துணை செயலாளர் ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் தமிழ்ச்செல்வி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் விஜயா, அனைந்திந்திய பேசினர். கூட்டத்தில் இயக்குநர் பாலசந்தர், எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் நேபாள பூகம்பத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வருகிற ஜுன் 6ம்தேதி மக்கள் கலை விழா நடத்துவதற்காக கலைவிழாவிற்கு 11 பேர் கொண்ட விழாக்குழு அமைக்கப்பட்டது. இதில் தலைவர் கலைமகள் சேகர், செயலாளர் நேரு, பொருளாளர் வக்கீல் அருள்செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அஞ்சலத்துறை அன்பழகன் நன்றி கூறினார்.

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka