
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை (தனி) தொகுதியில் உள்ள மேலத்தொண்டியக்காடு கிராமத்தில் அனுமதி இன்றி நடத்தப்படும் இறால் பண்ணைகளால் சுற்றுப்புறச் சூழல் மாசடைவதாகவும், குடிநீர் சரிவர வழங்கப்படாதது குறித்தும் அதிருப்தி அடைந்திருந்த கிராம மக்கள் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கு.பிரேம்குமார், வட்டாட்சியர் பழனிவேல், தேர்தல் துணை வட்டாட்சியர் சங்கர், மீன்வளத்துறை உதவி இயக்குனர் உமா, குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயராகவன் ஆகியோர் அந்த கிராம பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் ஒருமாதகால அவகாசத்தில் அனுமதி இன்றி நடத்தப்படும் இறால் பண்ணைகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதி அளித்ததன் பேரில் தேர்தல் புறக்கணிப்பை கிராம மக்கள் கைவிட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக