மனித சமூகம் உலக அளவில் உயர்ந்து இருக்க வேண்டும் என்றால் நூறு சதம் வாக்குப்பதிவு அவசியம் என்றார் சென்னை தரமணி அறிவியல் நகரம் துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ்.
மன்னார்குடியில் மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் சார்பில் நமது வாக்கு, நமது உரிமை என்ற தலைப்பில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அவர் பேசியது:
ஒவ்வொரு மனிதனுக்கும் உணர்வைத் தாண்டி உணர்ச்சி அவசியம். நியாயமான தேர்தல் மூலம்தான் வலுவான ஜனநாயகத்தை கட்டமைக்க முடியும். அநீதிகளை எதிர்த்து பொறுப்பற்று வாக்களிக்காமல் இருப்பவர்களின் மனநிலையை மாற்றி, சமூக ஜனநாயக கடமையாற்ற வாக்களிக்க வைத்து அவர்களைப் பொறுப்புள்ளவர்களாக நாம் மாற்ற வேண்டும்.
ஊழல் செய்யும் நோக்கத்துடன் தேர்தல் களத்திற்கு வருபவர்கள் பணம், பரிசு என வாக்காளருக்கு கொடுக்க முன் வருகின்றனர். இவற்றிற்கு ஆசைப்பட்டு நம் வாக்கை, நம் உரிமையை விற்றுவிடக்கூடாது. சமூக நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நூறு சதம் வாக்கு என்பதை கல்லூரி மாணவர்கள் மூலம் கொண்டு சென்றால் அந்த விழிப்புணர்வு பிரசாரம் அவரது பெற்றோர், உறவினர், நண்பர்கள் வரை சென்றடையும் என்றார்.
அமைப்பின் தலைவர் தி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மன்னார்குடி தொகுதி வாக்காளர்களின் கோரிக்கைகளை செயற்குழு உறுப்பினர் அருண்ரவி வாசித்தார். தலைமை ஆலோசகர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வம் துவக்கவுரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர்கள் சி.ராம் வரவேற்றார். ரெ.விக்னேசு நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக