தஞ்சாவூர்,:தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக வல்லம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 102 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. இரவு, ஏழு மணிக்கு மேல் குளிர்ந்த காற்று வீச துவங்கியது. நள்ளிரவு, 11.30 மணி முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரண்டு மணி நேரம் வரை நீடித்த மழையினால், தஞ்சை நகரின் பல பகுதிகளில், மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. புதிய பஸ் ஸ்டாண்ட், திலகர் திடல், ஆற்றுப்பாலம் பகுதிகளில் மழை தண்ணீர் குளம்போல் தேங்கியது. மாவட்டம் முழுவதும், இரண்டு மணி நேரத்தில் 861.5 மி.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வல்லம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 102 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்துள்ள மழையளவு வருமாறு: ஆதிராம்பட்டிணம்-18.50, கும்பகோணம்- 65, பாபநாசம்- 76, தஞ்சாவூர்- 60, திருவையாறு- 40.40, திருக்காட்டுபள்ளி- 15.20, கல்லணை- 12.20, அய்யம்பேட்டை- 54, திருவிடைமருதூர்- 23, மஞ்சலாறு- 45, நெய்வாசல் தென்பாதி- 41.40, பூதலூர்- 4.60, வெட்டிக்காடு- 53.60, ஈச்சன்விடுதி- 24.20, ஒரத்தநாடு- 25.60, மதுக்கூர்- 42.60, பட்டுக்கோட்டை- 49, பேராவூரணி- 20, கீழ அணைகட்டு- 49.60, குருங்குளம்- 39 மி.மீ., மழை பெய்துள்ளது. கட ந்த ஆண்டு கோடையில் வெ றும், 14.20 மி.மீ., மழை மட்டு÷ ம பெய்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை சராசரியாக, 99.60 மி.மீ., மழை பெய்துள்ளது.தொடரும் கோடை மழை குறுவை சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளது என்பதால், அம்மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் அனைத்துதரப்பு மக்களும் நிம்மதியடைந்துள்ளனர்.
* திருவாரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 மணி முதல், நேற்று அதிகாலை, 4 மணி வரை மாவட்டம் முழுவதும் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
திருவாரூரில், 58மி.மீ., நன்னிலத்தில், 50.20, குடவாசலில், 74.80, வலங்கைமானில், 68.40, நீடாமங்கலத்தில், 86, மன்னார்குடியில், 78, முத்துப்பேட்டையில், 54.20, திருத்துறைப்பூண்டியில், 63.40, பாண்டவையாறு தலைப்பு பகுதியில், 55.60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நீடாமங்கலத்தில், 86 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 65.40 மி.மீ மழை பெய்துள்ளது.
இந்த மழை காரணமாக, திருவாரூர் உட்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நேற்று காலை, 10 மணிக்கு மின்வினியோகம் செய்யப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக