திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தை கண்டித்து வரும் 11ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இது குறித்து விவசாய தொழிலாளர் சங்க திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருத்துறைப்பூண்டியில் சட்டம் ஒழுங்கு சீர் கெடுவதற்கும், பொது அமைதியின்மைக்கு காரணமாக இருக்கும் இரவு நேர மதுபான கடை கள், கள்ளசாராயம், கஞ்சா, லாட்டரி சீட்டு, வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை ஆகியவற்றிக்கு துணை போகும் திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தை கண்டி த்து வரும் 11ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.காமராஜர் சிலை அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன் தலைமை வகிக்கிறார். இவ் வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக