செவ்வாய், 14 ஏப்ரல், 2015

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதியில் சேர்ந்து படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், ஒய்எம்சிஏ பள்ளி சென்னை, என்எல்சி பள்ளி நெய்வேலி, அரசு மேல்நிலைப்பள்ளி புதூர் சென்னை, செல்வம் மேல்நிலைப்பள்ளி நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ளது. மாணவிகளுக்கு ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, நேரு உள்விளையாட்டரங்கம் சென்னை, பாரதி வித்யாபவன் திண்டுக்கல், செல்வம் மேனிலைப்பள்ளி நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ளது. விளையாட்டு விடுதிகளில் சேர 7,8,9 மற்றும் பிளஸ்-1 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை மே 2 முதல் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 2015-16-ம் ஆண்டிற்கான சேர்க்கை கீழ்காணும் விளையாட்டுகளில் நடைபெறுகிறது.

மாணவர்கள்: தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், பளு தூக்குதல், கபடி.

மாணவிகள்: தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, ஹாக்கி, டென்னிஸ், வாலிபால், பளுதூக்குதல், கபடி. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று ஏப். 25-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04366-227158 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka