வியாழன், 30 ஏப்ரல், 2015

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி சாவு

திருத்துறைப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் சரகம், கள்ளிக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த ரெங்கசாமி மனைவி அஞ்சம்மாள் (80). கடந்த 24-ம் தேதி கள்ளிக்குடி கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் கூட்டுறவு அங்காடிக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அஞ்சம்மாள் தலையில் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். விபத்து தொடர்பாக எடையூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்


மே தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (மே 1) அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என நாகை, திருவாரூர் ஆட்சியர்கள் சு. பழனிசாமி, எம். மதிவாணன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மே தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள், உரிமம் பெற்றுள்ள ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்க வேண்டும்.
மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருவாரூரில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப உணவு உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சங்க மாவட்டத் தலைவர் ரங்கராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலர் மாசிலாமணி மற்றும் நிர்வாகிகள் ஜோசப், சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சை, திருவாரூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை திருத்துறைப்பூண்டியில், 63.40 மி.மீ

தஞ்சாவூர்,:தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக வல்லம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 102 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. இரவு, ஏழு மணிக்கு மேல் குளிர்ந்த காற்று வீச துவங்கியது. நள்ளிரவு, 11.30 மணி முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரண்டு மணி நேரம் வரை நீடித்த மழையினால், தஞ்சை நகரின் பல பகுதிகளில், மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. புதிய பஸ் ஸ்டாண்ட், திலகர் திடல், ஆற்றுப்பாலம் பகுதிகளில் மழை தண்ணீர் குளம்போல் தேங்கியது. மாவட்டம் முழுவதும், இரண்டு மணி நேரத்தில் 861.5 மி.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வல்லம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 102 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்துள்ள மழையளவு வருமாறு: ஆதிராம்பட்டிணம்-18.50, கும்பகோணம்- 65, பாபநாசம்- 76, தஞ்சாவூர்- 60, திருவையாறு- 40.40, திருக்காட்டுபள்ளி- 15.20, கல்லணை- 12.20, அய்யம்பேட்டை- 54, திருவிடைமருதூர்- 23, மஞ்சலாறு- 45, நெய்வாசல் தென்பாதி- 41.40, பூதலூர்- 4.60, வெட்டிக்காடு- 53.60, ஈச்சன்விடுதி- 24.20, ஒரத்தநாடு- 25.60, மதுக்கூர்- 42.60, பட்டுக்கோட்டை- 49, பேராவூரணி- 20, கீழ அணைகட்டு- 49.60, குருங்குளம்- 39 மி.மீ., மழை பெய்துள்ளது. கட ந்த ஆண்டு கோடையில் வெ றும், 14.20 மி.மீ., மழை மட்டு÷ ம பெய்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை சராசரியாக, 99.60 மி.மீ., மழை பெய்துள்ளது.தொடரும் கோடை மழை குறுவை சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளது என்பதால், அம்மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் அனைத்துதரப்பு மக்களும் நிம்மதியடைந்துள்ளனர்.
* திருவாரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 மணி முதல், நேற்று அதிகாலை, 4 மணி வரை மாவட்டம் முழுவதும் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
திருவாரூரில், 58மி.மீ., நன்னிலத்தில், 50.20, குடவாசலில், 74.80, வலங்கைமானில், 68.40, நீடாமங்கலத்தில், 86, மன்னார்குடியில், 78, முத்துப்பேட்டையில், 54.20, திருத்துறைப்பூண்டியில், 63.40, பாண்டவையாறு தலைப்பு பகுதியில், 55.60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நீடாமங்கலத்தில், 86 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 65.40 மி.மீ மழை பெய்துள்ளது.
இந்த மழை காரணமாக, திருவாரூர் உட்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நேற்று காலை, 10 மணிக்கு மின்வினியோகம் செய்யப்பட்டது.

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

"காவிரி: தமிழக அனைத்துக் கட்சி குழுவினர் பிரதமரை சந்திக்க வேண்டும்'

காவிரி பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி குழுவினர் பிரதமரை சந்தித்து முறையிட வேண்டும் என்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் கோ.க. மணி.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் மே 17-ம் தேதி பாமக சார்பில் சோழமண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் கோ.க.மணி பங்கேற்றார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழகத்தில் இளைய சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து வருகிறது. எனவே, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதேபோல், தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் ஊழலைத் தடுக்க வேண்டும். மே 17-ல் ஜயங்கொண்டத்தில் நடைபெறவுள்ள சோழ மண்டல மாநாடு திருப்புமுனை மாநாடாக அமையும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவை விரைந்து அமைக்க வேண்டும், கர்நாடகம் காவிரியில் புதிய அணைக் கட்டுவதை தடுக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, பிரதமரை சந்திக்க வேண்டும் என்றார் கோ.க. மணி.

திருத்துறைப்பூண்டி அருகே மதுபான கடையில் கொள்ளை முயற்சி

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரத்தில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் மேற்பார்வையாளராக ஸ்டாலின் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை ஸ்டாலினுக்கு, மதுபான கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஸ்டாலின் கடைக்கு வந்து பார்த்தார். ஆனால் கடையில் மேஜையின் உள் அறையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருட்டு போகவில்லை. எனினும் ஸ்டாலின் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து தகவல் தெரிவித்தார். அதன்பேரில் துணை சூப்பிரண்டு கண்ணதாசன், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்–இன்ஸ்பெக்டர் அருள்பிரியா மற்றும் போலீசார் மதுபான கடையில் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் கடைக்கு வந்த மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கடையில் சோதனை நடத்தினர். திருவாரூரில் இருந்து மோப்ப நாய் மெர்சி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணி நடந்தது. மோப்ப நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளை முயற்சி தொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டியை அடுத்த கரும்பியூரில் உள்ள மதுபான கடையிலும் மர்ம ஆசாமிகள் கொள்ளை அடிக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பாதுகாப்பு சேவை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற இலவச பயிற்சி

தனியார் துறைகளில் பாதுகாப்பு சேவை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற இலவச திறன் எய்தும் பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெற திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி ஆகியோர் தனித்தனியே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் இளைஞர்கள் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பாதுகாப்பு சேவை பணிகள் குறித்து 21 நாள்கள் திறன் எய்தும் பயிற்சியை தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து வழங்குகிறது.

இந்த பயிற்சி திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானங்களில் 21 நாள்கள் தினமும் காலை 9.00 முதல் மாலை 5.30 வரை இலவசமாக நடத்தப்படுகிறது.

பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் பயிற்சி நாள்களில் தேநீர், மதிய உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். குறைந்தபட்சமாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி பெற விருப்பமுள்ள இளைஞர்கள் அசல் கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட முகவரி சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை அசல், 3 புகைப்படங்கள் உள்ளிட்டவைகளுடன் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் விண்ணப்பதை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

எனவே, விருப்பமுள்ள இளைஞர்கள் ஏப். 20, 21 ஆகிய தேதிகளில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை பயிற்சி மைதானங்களில் உள்ள காவல்துறையை அணுகி பயன்பெறலாம்.

புதன், 15 ஏப்ரல், 2015

ஆந்திர முதல்-மந்திரி உருவ பொம்மை எரிப்பு

திருத்துறைப்பூண்டியில் ஆந்திர மாநில முதல்- மந்திரி சந்திரபாபுநாயுடுவின் உருவ பொம்மையை எரித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப் பாட்டம் செய்தனர்.

உருவ பொம்மை எரிப்பு

ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டு கொன்ற ஆந்திரமாநில போலீஸ் மற்றும் வனத்துறை யினரை கண்டித்தும், இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் திருத்துறைப் பூண்டி யில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்தின்போது ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடுவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இடிமுரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணை செய லாளர்கள் முல்லைவளவன், வெற்றி, ஒன்றிய செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட வர்த்தக பிரிவை சேர்ந்த ரமணி, இளம் சிறுத்தைகள் பாசறை மாவட்ட அமைப்பா ளர் ரஜினி, மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் பூமிநாதன், அறிவு, ஒன்றிய பொருளாளர் செந்தில், ஒன்றிய பொறுப்பா ளர்கள் இளங்கோவன், இளை யராஜா, திருத்துறைப்பூண்டி முன்னாள் நகர யெலாளர் சங்கர் உள்பட 50-க்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்ட னர்.

கோரிக்கைகள்

போலி என்கவுன்டர் செய லில் ஈடுபட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும், இந்த சம்பவத்திற்காக ஆந்திர மாநில அரசை கலைக்க வேண் டும், பாதிக்கப்பட்ட தமிழர் களின் குடும்பங்களுக்கு நிவார ணம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட் டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன.

திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பா.ஜனதா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று அம்பேத்கரின் 125–வது பிறந்த நாள் விழா பா.ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி முத்துப்பேட்டை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பா.ஜனதா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் கணேசன், மாவட்ட செயலாளர் இளசுமணி, மாவட்ட பொருளாளர் சிவகுமார், மாவட்ட அமைப்பு செயலாளர் ராகவன், நகர தலைவர் வினோத், ஒன்றிய தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில எஸ்.சி. அணி செயற்குழு உறுப்பினர் அரிச்சந்திரன், மாநில வணிகர் பிரிவு செயற்குழு உறுப்பினர் குருசங்கர், மாவட்ட வழக்கறிஞர்கள் அணி தலைவர் ராஜவேல் உள்பட பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய கம்யூனிஸ்டு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில துணை செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். உலகநாதன் எம்.எல்.ஏ., விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன், துணை செயலாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வையாபுரி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், விவசாய சங்க நகர செயலாளர் வாசு, மாவட்டக்குழு உறுப்பினர் உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முருகானந்தம், நகர செயலாளர் முருகானந்தம், நகர செயலாளர் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் இடிமுரசு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் முல்லைவளவன், வெற்றி, ஒன்றிய செயலாளர் பிரகாஷ், நகர செயலாளர் தங்க.சுரேஷ், இளம் சிறுத்தைகள் பாசறை மாவட்ட அமைப்பாளர் ரஜினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர்கள் சவுந்திரபாண்டியன், தியாகராஜன், நகர செயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் இளங்கோவன் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ரகுபதிபாண்டியன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் ஆரோக்கியசெல்வன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் சங்கர், நகர செயலாளர் ரஞ்சித்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டியில் மின் இணைப்பில் பெயர் மாற்ற இன்று முகாம்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மின்வாரிய உட்கோட்ட மின் இணைப்புதாரர்கள் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான முகாம் புதன்கிழமை (ஏப். 15) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் அழகேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தப் பகுதியில் உள்ள அதிகப்படியான மின் இணைப்புகள் இறந்தவர்களின் பெயரிலும், பழைய உரிமையாளர்கள் பெயரிலும் உள்ளது. இந்த முகாமில், வாரிசுதாரர்களும், தற்போதைய வீட்டு உரிமையாளர்களும் விண்ணப்பப் படிவத்துடன், கிராம நிர்வாக அலுவலர் சான்று, வீட்டுவரி ரசீது, பட்டா நகல், உரிமையாளர் இறந்திருந்தால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்ட வாரிசுச் சான்று, இறப்புச் சான்று, 1-க்கும் மேற்பட்ட வாரிசுதாரர் இருந்தால், மற்ற வாரிசுதாரர்களிடம் இருந்து ரூ. 100 மதிப்புள்ள பத்திரத்தில் ஆட்சேபணை இல்லா கடிதம் போன்றவற்றை அளித்து பெயர் மாற்றக் கட்டணம் ரூ. 200 செலுத்தி அதே நாளில் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதியில் சேர்ந்து படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், ஒய்எம்சிஏ பள்ளி சென்னை, என்எல்சி பள்ளி நெய்வேலி, அரசு மேல்நிலைப்பள்ளி புதூர் சென்னை, செல்வம் மேல்நிலைப்பள்ளி நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ளது. மாணவிகளுக்கு ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, நேரு உள்விளையாட்டரங்கம் சென்னை, பாரதி வித்யாபவன் திண்டுக்கல், செல்வம் மேனிலைப்பள்ளி நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ளது. விளையாட்டு விடுதிகளில் சேர 7,8,9 மற்றும் பிளஸ்-1 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை மே 2 முதல் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 2015-16-ம் ஆண்டிற்கான சேர்க்கை கீழ்காணும் விளையாட்டுகளில் நடைபெறுகிறது.

மாணவர்கள்: தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், பளு தூக்குதல், கபடி.

மாணவிகள்: தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, ஹாக்கி, டென்னிஸ், வாலிபால், பளுதூக்குதல், கபடி. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று ஏப். 25-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04366-227158 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ரூ. 6.26 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

Image result for எம். மதிவாணன்திருவாரூர் ஆட்சியரகத்தில் ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் ரூ. 6.26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பட்டா மாறுதல், புதியக் குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 162 பேர் மனு அளித்தனர்.

அப்போது, ஆதிதிராவிடர் நலத் துறையில் ரூ. 5.62 லட்சத்துக்கான காசோலை, பிளஸ்-2 வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 20 மாணவர்களுக்கு ரூ. 39,000 காசோலை மற்றும் சான்றிதழ்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சுயஉதவி குழு உறுப்பினாóகளுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி பெற்ற 16 பேருக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி உபகரணங்கள், வேளாண்மை துறையில் பட்டு உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்ட விவசாயி ஒருவருக்கு பரிசுத் தொகை ரூ. 25,000-க்கான காசோலை என மொத்தம் ரூ. 6.26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், வேளாண் இணை இயக்குநர் மயில்வாகனன், மாவட்ட ஆதிதிராவிடாó நலத் துறை அலுவலர் அசோகன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) லெ. விஜயலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

திருத்துறைப்பூண்டி அருகே கணவன்–மனைவி மீது தாக்குதல்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள காடுவாகொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய தோட்டத்தில் உள்ள மரங்களை அழகிரிகோட்டகத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ்(வயது36) என்பவர் ஆட்களை வைத்து வெட்டினார். இதுதொடர்பாக ராஜமாணிக்கம்–ரமேஷ் இடையே தகராறு நடந்தது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், ராஜமாணிக்கத்தை இரும்பு கம்பியால் தாக்கினார். இதை தடுக்க முயன்ற ராஜமாணிக்கத்தின் மனைவி அம்புஜம் என்பவருக்கும் இரும்பு கம்பியால் அடி விழுந்தது. படுகாயம் அடைந்த ராஜமாணிக்கம், அவருடைய மனைவி அம்புஜம் ஆகிய இருவரும் உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, சப்–இன்ஸ்பெக்டர்கள் வீரபரஞ்ஜோதி, ராஜ், கல்யாணம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முத்துப்பேட்டை அருகே வீடு புகுந்து தங்க நகை திருட்டு

முத்துப்பேட்டை அருகே உள்ள பாண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மனைவி மீனாட்சி (வயது42). முருகையன் இறந்துவிட்டார். மீனாட்சி விவசாய தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் மீனாட்சி வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பித்தளை குடம், பானை, பீரோவில் இருந்த 3 கிராம் தங்க நகைகளை காணவில்லை. இதுகுறித்து மீனாட்சி அளித்த புகாரின்பேரில் எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகை மற்றும் பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வீடு புகுந்து திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மனைவிக்கு தெரியாமல் 2–வது திருமணம் செய்த அரசு பஸ் கண்டக்டர் கைது

திருத்துறைப்பூண்டிஅருகே உள்ள மாங்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர்  சிவா(வயது38). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் வசந்தி என்ற பெண்ணுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் இவர் பட்டுக்கோட்டை அருகே உள்ள பாப்பாநாடு மெயின் ரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணை 2–வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வசந்தி அதிர்ச்சி அடைந்து திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். மேலும் திருணமணம் செய்த சர்மிளாபானு என்ற பெண்ணையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

எண் பலகை இல்லாமல் நின்ற டிராக்டர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா? போலீஸ் விசாரணை

திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, சப்–இன்ஸ்பெக்டர்கள் வீரபரஞ்ஜோதி, ராஜ், கல்யாணம் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருத்துறைப்பூண்டியை அடுத்த எழிலூர் சுடுகாடு பகுதியில் ஒரு டிராக்டர் எண் பலகை இல்லாமல் அனாதையாக நின்றது. இதையடுத்து அந்த டிராக்டரை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு போலீசார் எடுத்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை கடத்தலுக்கு பயன்படுத்தினார்களா? யாருடைய டிராக்டர்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல்: முதியவர் சாவு

Image result for accidentதிருத்துறைப்பூண்டி காவல் சரகம் தலைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (60). இவர் திருத்துறைப்பூண்டி மேட்டுத்தெருவில் பெட்டிக் கடை நடத்தி வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடைக்கு தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருவாரூரில் வந்த டேங்கர் லாரி ஒன்று சைக்கிள் மீது மோதியதில் குணசேகரனுக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. இதையடுத்து, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான திருவாரூரைச் சேர்ந்த பெர்னான்டûஸ கைது செய்தனர்.

பள்ளி வாகனம் மோதி கார் ஓட்டுநர் சாவு

திருவாரூர் அருகே பள்ளி வாகனம் மோதியதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Image result for விபத்தில்


திருவாரூர் கொத்தத்தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வேம்பையன் (26). கார் ஓட்டுநரான இவர், வெள்ளிக்கிழமை இரவு திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மாங்குடி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த பள்ளி வாகனமும், இருசக்கர வாகனமும் மோதி கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து, வேம்பையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்

Image result for tntjதிருத்துறைப்பூண்டி, : பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்றுதமிழ்நாடு தவ்ஹூத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாத் பாமணி கிளை சார்பில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற் றது. திருவாரூர் மாவட்ட செயலாளர் அப்துல்மாலிக் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பீர்முகம்மது, துணைத் தலைவர் முகம்மது மிஸ்கின் முன்னிலை வகித்தனர். மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சுலைமான் மறுமை வெற்றிக்கு என்ன வழி? என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் யாசர் அரபாத் பிர்தௌஸி தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத்தின் சமுதாயப்பணிகள் என்ற தலைப்பிலும், பாஜிலா பர்வீன் ஆலிமா பெண்களும் தொழுகையும் என்ற தலைப்பிலும் பேசினர். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண் டும். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பை பாமணி ஊராட்சி வழங்கவேண்டும். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடை யூறாக பாமணி மெயின்ரோட்டில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கிளை தலைவர் முகம்மது யூசுப் நன்றி கூறினார்.

சனி, 11 ஏப்ரல், 2015

குடும்பத் தகராறு:தீக்குளித்தவர் மருத்துவமனையில் அனுமதி

Image result for குடும்பத் தகராறு:தீக்குளித்தவர் மருத்துவமனையில் அனுமதிதிருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை குடும்பத் தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் சரகம் குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் செந்தில் (36). இவர் தனது மனைவியின் உறவினர் வீட்டு திருமண விருந்து நிகழ்ச்சிக்கு செல்லவில்லையாம். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த செந்தில் எடையூர் காவல்நிலையம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். எடையூர் போலீஸார் அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் தீவிர சிகிச்சைக்கைகாக செந்தில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எடையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka