வியாழன், 26 மே, 2011

முத்துப்பேட்டை அருகே இடி தாக்கி விவசாயி ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே இடி தாக்கி விவசாயி ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.

முத்துப்பேட்டை அருகிலுள்ள கீழநம்மங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (50). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வயலில் ஆடுகளை பட்டியில் கட்டிவிட்டு, அங்கேயே காவலுக்குப் படுத்திருந்தாராம். அப்போது இடி, மின்னலுடன் பலத்த பலத்த மழை பெய்தது. மேலும் இடி தாக்கியதில் உடல் கருகி ராஜமாணிக்கம் இறந்தார். மேலும் 3 ஆடுகளும் உடல் கருகி இறந்தன. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரவி அளித்த புகாரின் பேரில், முத்துப்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து 13வது முறையாகவும், உலகநாதன் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தனி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து 13வது முறையாகவும், உலகநாதன் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உலகநாதன் இரண்டாவது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க., கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக செல்வதுரை போட்டியிட்டார்.

மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 540 வாக்குகள் பதிவானது. உலகநாதன் 83 ஆயிரத்து 339 வாக்குகள் பெற்றார். செல்வதுரை 61 ஆயிரத்து 112 வாக்குகள் பெற்றார். 2006ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்டு அ.தி.மு.க., வேட்பாரை விட 22 ஆயிரத்து 706 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற உலகநாதன் தற்போதை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்டு கடந்த தேர்லை விட ஆயிரத்து 589 வாக்குள் குறைவாக பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் செல்வதுரையை 21 ஆயிரத்து 117 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

வியாழன், 20 ஜனவரி, 2011

விவசாயிகளுக்கு வேண்டுகோள்...

திருத்துறைப்பூண்டி, ஜன. 19: நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2000-ம், தமிழக அரசு குவிண்டாலுக்கு ரூ. 400 ஊக்கத் தொகையாகவும் வழங்க வேண்டும் என, கோரப்பட்டுள்ளதால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யும் விவசாயிகள் அந்த கொள்முதல் ரசீதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று, "நமது நெல்லைக் காப்போம்' ஒருங்கிணைப்பாளர் ஆர். ஜெயராமன் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது:

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வலிவலம் சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலர் கீவளூர் தனபால் ஆகியோர் தலைமையில் டிசம்பர் 10-ம் தில்லியில் நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தி விலை உயர்வை அறிவிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில அரசிடம் ஊக்கத் தொகையாக குவிண்டாலுக்கு ரூ. 400 கோரப்பட்டுள்ளது. இந்த தொகை விரைவில் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட உள்ளதால், அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யும் விவசாயிகள் அந்த ரசீதுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென்றும், விலை உயர்வு அறிவிக்கப்படும் பட்சத்தில் அந்த கூடுதல் தொகையை பெற இது உதவியாக இருக்கும் என்றும் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதல்: 2 இளைஞர்கள் சாவு

திருத்துறைப்பூண்டி, ஜன. 16: திருத்துறைப்பூண்டி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் சரகம் கொக்காலடி கீழ குடியிருப்பைச் சேர்ந்த சிறைமீட்டான் மகன் சசிகுமார் (25). இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் மதி (22) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் திருத்துறைப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அதே சமயம் வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த கார் இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸôர் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநர் ஆரோக்கியசாமி மகன் விக்டரைக் கைது செய்தனர்

புதன், 19 ஜனவரி, 2011

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக கே. பாஸ்கரன் நியமனம்

ஜன.19: திருவாரூர் மாவட்ட ஆட்சியராக கே. பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த எம். சந்திரசேகரன் இந்திய மருத்துவக் கழகத்தின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் செய்தி - மக்கள் தொடர்பு இயக்குநராகப் பணியாற்றிய கே. பாஸ்கரன் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சனி, 15 ஜனவரி, 2011

ஐந்தாண்டில் ரூ.6.08 கோடியில் வளர்ச்சிப்பணிகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி தலைவர் பெருமிதம்

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மேற்கொண்ட வளர்ச்சிப் பணி தொடர்பாக, நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி செல்வராஜன் கூறியதாவது:கடந்த 2006 - 07ம் ஆண்டில் 10வது மானிய நிதிக்குழு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலும், இரண்டாம் பகுதியாக 19.25 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 12வது நிதிக்குழு திட்டத்தில் 21.40 லட்சம் ரூபாய் மதிப்பிலும், மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கு 5.20 லட்சம் ரூபாயும், சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 15.15 லட்சம் ரூபாயிலும், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 1.51 லட்சம் ரூபாயிலும் 41 பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.கடந்த 2007 - 08ம் ஆண்டு 12வது நிதிக்குழு திட்டத்தில் 17.10 லட்சம் ரூபாயிலும், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் 20.90 லட்சம் ரூபாயிலும், நிதிக்குழு சமன்பாட்டு நிதியில் இருந்து 5.50 லட்சம் ரூபாயிலும், தேர்தல் சேமிப்பு நிதியாக 3.62 லட்சம் ரூபாயும், இரண்டாவது மானியக்குழு நிதியில் 22 லட்சம் ரூபாயிலும், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் 6.30 லட்சம் ரூபாயிலும் 34 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2008 - 09ம் ஆண்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 5.5 லட்சம் ரூபாயிலும், வெள்ள நிவாரணப்பணிகளாக சாலைப்பணிகள் மேம்பாடு 31.80 லட்சம் ரூபாயிலும், இயக்குதலும், பராமரித்தலும் இடைநிலை திட்டத்தின் கீழ் மண் சாலையை தார்சாலையாக மாற்றுதல், மண் சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றுதல் 38 பணிகள் 88.80 லட்சம் ரூபாயிலும், புதிய அலுவலக கட்டிடப்பணி 70 லட்சம் ரூபாய் மதிப்பிலும் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2009 - 10ம் ஆண்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் 6.60 லட்சம் ரூபாயில் ஐந்து பணிகளும், 12வது நிதிக்குழுவின் கீழ் 3.80 லட்சம் ரூபாயில் ஒரு பணியும், எஸ்.ஜி.ஆர்.ஒய்., திட்டத்தில் 1.55 லட்சம் ரூபாயில் ஒரு பணியும் செய்து முடிக்கப்பட்டுள்ளது.


நடப்பு 2010 - 11ம் ஆண்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் 4.50 லட்சம் ரூபாயிலும், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி எட்டு லட்சம் ரூபாயில் ஒரு பணியும், வாம்பே திட்டத்தில் பொது சுகாதார வளாகம் கட்டுதல் நான்கு பணிகள் 20 லட்சம் ரூபாயிலும், சொர்ணஜெயந்தி ரோஜ்கார் யோஜனா திட்டத்தில் 2.20 லட்சம் ரூபாயில் ஒரு பணியும் தற்போது நடந்து வருகிறது. மேலும், சிறப்பு சாலை திட்டத்தில் 2010 - 11ம் ஆண்டுக்கு 2.27 கோடி ரூபாய் 23 சாலைப்பணிகள் நடந்து வருகிறது. கடந்த நான்காண்டு நிறைவு பெற்ற பின் மக்களின் கோரிக்கைகள் ஏற்பட்டு படிப்படியாக கவுன்சிலர்கள் ஒத்துழைப்புடன் நகராட்சி வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகிறது. ஐந்தாமாண்டு துவங்கப்பட்ட பணிகள் தொடர்ந்து நடக்கிறது. நடக்கும் பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த ஐந்தாண்டுகளில் மக்கள் நலத்திட்டத்துக்காக ஆறு கோடியே ஏழு லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


பள்ளி மாணவர்களை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு

திருத்துறைப்பூண்டி, ஜன. 13: திருத்துறைப்பூண்டி அருகே குடிபோதையில் பள்ளி மாணவர்களைத் தாக்கிய மூன்று இளைஞர்கள் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி காவல் சரகம் தீவாம்பாள்பட்டினம் பகுதியைச் சேர்ந்த வீரமுத்து மகன் ராம்குமார் (12), வேதமூர்த்தி மகன் சதீஷ்குமார் (12) ஆகியோர் அதே பகுதியில் உள்ள சேகல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அதே ஊரைச் சேர்ந்த டி. மாதவன், ஆர்.விஸ்வநாதன், எஸ். குமரேசன ஆகியோர் மாணவர்கள் இருவரையும் அடித்து உதைத்தனராம். இதைத் தடுக்க வந்த ஊராட்சி உறுப்பினர் ராமசாமியையும் தாக்கினராம்.

மாணவர்கள் இருவரும் திருவாரூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையிலும், ராமசாமி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ராமசாமி அளித்த புகாரின் பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மூன்று இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.

திங்கள், 10 ஜனவரி, 2011

உண்னா விரத போராட்டம்

திருத்துறைப்பூண்டி ஜன 10 திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளுர் கிராம ஜீவா நகர் மக்கள் மற்றும் திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பில் உண்னா விரத போராட்டம் தாலுக்கா அலுவலகம் முன் நடைபெற்றது இப்போராட்டம் அடிப்படை உரிமைகளை கேட்டு நடைபெறுவதாக சுவாசம் தொண்டு நிறுவணத்த கூறினார்

தேமுதிக செயலரை கத்தியால் குத்திய பாஜக பிரமுகர் கைது

திருத்துறைப்பூண்டி, ஜன. 8: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய தேமுதிக செயலரைக் கத்தியால் குத்திய பாஜக பிரமுகரை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

முத்துப்பேட்டை ஒன்றிய தேமுதிக செயலராக எடையூர் கடைவீதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் முருகேசன் (35) இருந்து வருகிறார். இந்நிலையில், பாஜக சார்பில் சென்னையில் ஜனவரி 29-ல் நடைபெற உள்ள தாமரை யாத்திரையின் நிறைவு விழா குறித்து அக் கட்சியினர் விளம்பரம் செய்திருந்தனராம். அந்த விளம்பரத்தை அழித்துவிட்டு தேமுதிக சார்பில் சேலத்தில் நடைபெறும் மாநாடு குறித்து முருகேசன் தரப்பினர் எழுத முயன்றது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த சில நாள்களுக்கு முன் தகராறு ஏற்பட்டதாம்

இந்நிலையில், வெள்ளிக்கிழமை முத்துப்பேட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த முருகேசனை, பாஜக ஒன்றியச் செயலர் தமிழ்ச்செல்வன் மற்றும் நான்கு பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனங்களில் வந்து வழிமறித்து, தாக்கி கத்தியால் குத்தினராம். இதில் தொடைப் பகுதியில் பலத்த காயமடைந்த முருகேசன் திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முத்துப்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிந்து, தமிழ்ச்செல்வனைக் கைது செய்தனர்.

சனி, 8 ஜனவரி, 2011

"அரசு ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை செய்யவேண்டும்.'

திருத்துறைப்பூண்டி JAN 9: "அரசு ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை செய்யவேண்டும்.' என திருத்துறைப்பூண்டி பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர். திருத்துறைப்பூண்டியில் காய்கறி விலை விண்ணைத்தொடும் அளவுக்கு சென்றுவிட்டது. ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய், ஒரு கிலோ அவரைக்காய் 72 ரூபாய், உருளைக்கிழங்கு கிலோ 80 ரூபாய் என அனைத்து காய்கறிகளும் அளவுக்கு அதிகமாக விலை ஏறிவிட்டது. இது நடுத்தர மக்கள் சிறிய குடும்பத்துக்கு வாங்க வேண்டும் என்றாலும் 50 முதல் 75 ரூபாய் வரை ஆகிறது. ஆனால், அரைக்கிலோ மீன் 20 முதல் 30 ரூபாய்க்குள் வாங்கி குழம்பு வைத்துவிடலாம் என்று பெண்கள் கூறும் நிலை தொடர்கிறது.


டீஸல், பெட்ரோல் விலை ஏற்றத்தால், சமீபத்தில் பெய்த மழையாலும் காய்கறி விலை ஏறிவிட்டதாக வியாபாரிகள் கூறுகின்றனர். நடுத்தர மக்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் அரசு ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை செய்ய ஆவணம் செய்ய வேண்டும். ஏற்கனவே, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய், அரிசி, கோதுமை, தற்போது வெங்காயம் போன்றவை விற்பனை செய்வதுடன் காய்கறிகளையும் விற்பனை செய்ய வேண்டும். அத்துடன், அரசு பல சலுகைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதை தவிர்த்து, அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் இலவசமாக காய்கறி மூடைகளை கொண்டு செல்லலாம் என அறிவித்து செயல்படுத்த வேண்டும். எந்த இடங்களில் இருந்தும் காய்கறிகளை கட்டாயம் ஏற்றிச் செல்லவும், மார்க்கெட் பகுதியில் இறக்கவும் தனியார் மற்றும் அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு தேவையான உத்தரவுகளை அரசு பிறப்பித்தால் விலை உயர்வில் இருந்து நாட்டு காய்கறிகள் விலை குறையும்.


மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகள், மூத்த குடிமக்கள் என பலருக்கு பஸ், ரயில்களில் இலவச பாஸ் மற்றும் கட்டண சலுகை வழங்குவதுபோல, தற்போதையை விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு பஸ்கள் மற்றும் ரயில்களில் காய்கறிகளை கொண்டு செல்ல இலவச அனுமதி வழங்க வேண்டுமென, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


விலைவாசி உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி JAN 8விலைவாசி உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம் வேதாரண்யம் ரோட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாலுகா அலுவலகம் முன் மாவட்ட கவுன்சிலர் தமயேந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. யூனியன் தலைவர் தமிழ்செல்விராஜா முன்னிலை வகித்தார். மன்னார்குடி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு யூனியன் தலைவர் பாஸ்கரவள்ளி தலைமை வகித்தார். கோட்டூர் ஒன்றிய மாதர் சங்க தலைவர் தேவகி, ஒன்றிய செயலாளர் லிட்டில்மேரி, செயலாளர் சுலோசனா, நகர செயலாளர் மீனாம்பாள், கோட்டூர் யூனியன் தலைவர் பாண்டியன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். மாரடித்தும், ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவாரூர் தலைமை அஞ்சலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கமலவதனம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் வீரம்மாள், சாந்தி, அமுதா, புஷ்பவள்ளி, சென்னிமார்க் உட்பட பலர் பங்கேற்றனர்.

கிராம நிர்வாக அலுவலர் VAO மீது தாக்குதல்:அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜன. 6: திருத்துறைப்பூண்டி அருகே கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்டதை கண்டித்து, அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி வட்டம், எழிலூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன். அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு ராஜேந்திரன் வியாழக்கிழமை நிவாரணத் தொகையை வழங்கி கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த இளங்கோவன் மகன் வீரபத்திரன், நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக ராஜேந்திரனிடம் தகராறு செய்து, அவரை தாக்கினாராம்.

இதில் காயமடைந்த ராஜேந்திரன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த திருத்துறைப்பூண்டி போலீஸôர் தலைமறைவான வீரபத்திரனை தேடி வருகின்றனர்.

விஏஓ மீதான தாக்குதலை கண்டித்தும், வீரபத்திரனை கைது செய்ய வலியுறுத்தியும் கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டத் தலைவர் ஹாஜாமைதீன் தலைமையில் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சித. மீனாட்சிசுந்தரம், மாவட்டத் தலைவர் வி. கணேசன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் மலர்க்கொடி, வட்ட நிர்வாகிகள் குணசேகரன், மகேந்திரன் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராமப் பணியாளர்கள் என திரளான அரசு ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

புதன், 5 ஜனவரி, 2011

AL Hayar Info . NET: இங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதி...

AL Hayar Info . NET: இங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதி...: "லண்டன்: கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஏராளமானோர் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளனர். ஆண்டுக்கு 5000 பேர் வீதம் இஸ்லாமு மாறி வருகின்றனர..."

செவ்வாய், 4 ஜனவரி, 2011

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ. 15 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, ஜன. 1: திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான விவசாயிகள் சங்க பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முத்துப்பேட்டையில் நடைபெற்ற இந்த பேரவை கூட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஆர். ஜெயக்குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிஎன். தங்கராஜு, வட்டார செயலர் கே.வி. ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் டி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அண்மையில் பெய்த பலத்த மழையால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். காவிரி டெல்டா விவசாயத்தைப் பாதுகாக்க தனி பாசன வடிகால் வாரியம் அமைக்க வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் தொகையை சரகம் வாரியாக கணக்கிடும் முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜி. சுந்தரமூர்த்தி, மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கச் செயலர் பி. ரத்தினம், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.ஜி. முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka