சனி, 8 ஜனவரி, 2011

"அரசு ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை செய்யவேண்டும்.'

திருத்துறைப்பூண்டி JAN 9: "அரசு ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை செய்யவேண்டும்.' என திருத்துறைப்பூண்டி பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர். திருத்துறைப்பூண்டியில் காய்கறி விலை விண்ணைத்தொடும் அளவுக்கு சென்றுவிட்டது. ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய், ஒரு கிலோ அவரைக்காய் 72 ரூபாய், உருளைக்கிழங்கு கிலோ 80 ரூபாய் என அனைத்து காய்கறிகளும் அளவுக்கு அதிகமாக விலை ஏறிவிட்டது. இது நடுத்தர மக்கள் சிறிய குடும்பத்துக்கு வாங்க வேண்டும் என்றாலும் 50 முதல் 75 ரூபாய் வரை ஆகிறது. ஆனால், அரைக்கிலோ மீன் 20 முதல் 30 ரூபாய்க்குள் வாங்கி குழம்பு வைத்துவிடலாம் என்று பெண்கள் கூறும் நிலை தொடர்கிறது.


டீஸல், பெட்ரோல் விலை ஏற்றத்தால், சமீபத்தில் பெய்த மழையாலும் காய்கறி விலை ஏறிவிட்டதாக வியாபாரிகள் கூறுகின்றனர். நடுத்தர மக்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் அரசு ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை செய்ய ஆவணம் செய்ய வேண்டும். ஏற்கனவே, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய், அரிசி, கோதுமை, தற்போது வெங்காயம் போன்றவை விற்பனை செய்வதுடன் காய்கறிகளையும் விற்பனை செய்ய வேண்டும். அத்துடன், அரசு பல சலுகைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதை தவிர்த்து, அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் இலவசமாக காய்கறி மூடைகளை கொண்டு செல்லலாம் என அறிவித்து செயல்படுத்த வேண்டும். எந்த இடங்களில் இருந்தும் காய்கறிகளை கட்டாயம் ஏற்றிச் செல்லவும், மார்க்கெட் பகுதியில் இறக்கவும் தனியார் மற்றும் அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு தேவையான உத்தரவுகளை அரசு பிறப்பித்தால் விலை உயர்வில் இருந்து நாட்டு காய்கறிகள் விலை குறையும்.


மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகள், மூத்த குடிமக்கள் என பலருக்கு பஸ், ரயில்களில் இலவச பாஸ் மற்றும் கட்டண சலுகை வழங்குவதுபோல, தற்போதையை விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு பஸ்கள் மற்றும் ரயில்களில் காய்கறிகளை கொண்டு செல்ல இலவச அனுமதி வழங்க வேண்டுமென, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka