வியாழன், 20 ஜனவரி, 2011

விவசாயிகளுக்கு வேண்டுகோள்...

திருத்துறைப்பூண்டி, ஜன. 19: நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2000-ம், தமிழக அரசு குவிண்டாலுக்கு ரூ. 400 ஊக்கத் தொகையாகவும் வழங்க வேண்டும் என, கோரப்பட்டுள்ளதால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யும் விவசாயிகள் அந்த கொள்முதல் ரசீதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று, "நமது நெல்லைக் காப்போம்' ஒருங்கிணைப்பாளர் ஆர். ஜெயராமன் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது:

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வலிவலம் சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலர் கீவளூர் தனபால் ஆகியோர் தலைமையில் டிசம்பர் 10-ம் தில்லியில் நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தி விலை உயர்வை அறிவிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில அரசிடம் ஊக்கத் தொகையாக குவிண்டாலுக்கு ரூ. 400 கோரப்பட்டுள்ளது. இந்த தொகை விரைவில் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட உள்ளதால், அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யும் விவசாயிகள் அந்த ரசீதுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென்றும், விலை உயர்வு அறிவிக்கப்படும் பட்சத்தில் அந்த கூடுதல் தொகையை பெற இது உதவியாக இருக்கும் என்றும் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka