திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மேற்கொண்ட வளர்ச்சிப் பணி தொடர்பாக, நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி செல்வராஜன் கூறியதாவது:கடந்த 2006 - 07ம் ஆண்டில் 10வது மானிய நிதிக்குழு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலும், இரண்டாம் பகுதியாக 19.25 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 12வது நிதிக்குழு திட்டத்தில் 21.40 லட்சம் ரூபாய் மதிப்பிலும், மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கு 5.20 லட்சம் ரூபாயும், சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 15.15 லட்சம் ரூபாயிலும், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 1.51 லட்சம் ரூபாயிலும் 41 பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.கடந்த 2007 - 08ம் ஆண்டு 12வது நிதிக்குழு திட்டத்தில் 17.10 லட்சம் ரூபாயிலும், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் 20.90 லட்சம் ரூபாயிலும், நிதிக்குழு சமன்பாட்டு நிதியில் இருந்து 5.50 லட்சம் ரூபாயிலும், தேர்தல் சேமிப்பு நிதியாக 3.62 லட்சம் ரூபாயும், இரண்டாவது மானியக்குழு நிதியில் 22 லட்சம் ரூபாயிலும், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் 6.30 லட்சம் ரூபாயிலும் 34 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 - 09ம் ஆண்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 5.5 லட்சம் ரூபாயிலும், வெள்ள நிவாரணப்பணிகளாக சாலைப்பணிகள் மேம்பாடு 31.80 லட்சம் ரூபாயிலும், இயக்குதலும், பராமரித்தலும் இடைநிலை திட்டத்தின் கீழ் மண் சாலையை தார்சாலையாக மாற்றுதல், மண் சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றுதல் 38 பணிகள் 88.80 லட்சம் ரூபாயிலும், புதிய அலுவலக கட்டிடப்பணி 70 லட்சம் ரூபாய் மதிப்பிலும் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2009 - 10ம் ஆண்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் 6.60 லட்சம் ரூபாயில் ஐந்து பணிகளும், 12வது நிதிக்குழுவின் கீழ் 3.80 லட்சம் ரூபாயில் ஒரு பணியும், எஸ்.ஜி.ஆர்.ஒய்., திட்டத்தில் 1.55 லட்சம் ரூபாயில் ஒரு பணியும் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2010 - 11ம் ஆண்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் 4.50 லட்சம் ரூபாயிலும், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி எட்டு லட்சம் ரூபாயில் ஒரு பணியும், வாம்பே திட்டத்தில் பொது சுகாதார வளாகம் கட்டுதல் நான்கு பணிகள் 20 லட்சம் ரூபாயிலும், சொர்ணஜெயந்தி ரோஜ்கார் யோஜனா திட்டத்தில் 2.20 லட்சம் ரூபாயில் ஒரு பணியும் தற்போது நடந்து வருகிறது. மேலும், சிறப்பு சாலை திட்டத்தில் 2010 - 11ம் ஆண்டுக்கு 2.27 கோடி ரூபாய் 23 சாலைப்பணிகள் நடந்து வருகிறது. கடந்த நான்காண்டு நிறைவு பெற்ற பின் மக்களின் கோரிக்கைகள் ஏற்பட்டு படிப்படியாக கவுன்சிலர்கள் ஒத்துழைப்புடன் நகராட்சி வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகிறது. ஐந்தாமாண்டு துவங்கப்பட்ட பணிகள் தொடர்ந்து நடக்கிறது. நடக்கும் பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த ஐந்தாண்டுகளில் மக்கள் நலத்திட்டத்துக்காக ஆறு கோடியே ஏழு லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக