சனி, 8 ஜனவரி, 2011

கிராம நிர்வாக அலுவலர் VAO மீது தாக்குதல்:அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜன. 6: திருத்துறைப்பூண்டி அருகே கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்டதை கண்டித்து, அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி வட்டம், எழிலூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன். அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு ராஜேந்திரன் வியாழக்கிழமை நிவாரணத் தொகையை வழங்கி கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த இளங்கோவன் மகன் வீரபத்திரன், நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக ராஜேந்திரனிடம் தகராறு செய்து, அவரை தாக்கினாராம்.

இதில் காயமடைந்த ராஜேந்திரன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த திருத்துறைப்பூண்டி போலீஸôர் தலைமறைவான வீரபத்திரனை தேடி வருகின்றனர்.

விஏஓ மீதான தாக்குதலை கண்டித்தும், வீரபத்திரனை கைது செய்ய வலியுறுத்தியும் கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டத் தலைவர் ஹாஜாமைதீன் தலைமையில் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சித. மீனாட்சிசுந்தரம், மாவட்டத் தலைவர் வி. கணேசன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் மலர்க்கொடி, வட்ட நிர்வாகிகள் குணசேகரன், மகேந்திரன் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராமப் பணியாளர்கள் என திரளான அரசு ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka