ஒரு காலத்தில் இணையம் என்றாலே அது Yahoo தான் என்றிருந்தது. மிகப் பெரிய இணையத்தள பூதமாக இருந்த Yahoo, பல நிறுவனங்களை வாங்கும் அளவிற்கு இருந்த Yahoo, இன்று தனது மதிப்பை இழந்து வெறும் $4.8 பில்லியன் டாலருக்கு Verizon நிறுவனம் வாங்கும் நிலைக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. எல்லா விசயங்களையும் Yahoo வில் தேடிய காலம் மாறி, யாகூவை கூகுளில் தேடும் காலம் உருவானது.
1994-ம் ஆண்டு டேவிட் பிலோ மற்றும் ஜெர்ரி யாங் என்பவர்களால் “Jerry and David’s Guide to the World Wide Web” என்ற சர்ச் இஞ்சின் தொடங்கப்பட்டது. சில மாதங்களில் Yahoo என மாற்றப்பட்டது.
யாகூ நியூஸ், ஃபைனான்ஸ், ஸ்போர்ட்ஸ், இமெயில், சமூக தளங்கள், விளம்பரங்கள், யாகூ ஃபோட்டோஸ், என எல்லாவற்றையும், ஒருங்கிணைத்தது யாகூ. எல்லா தகவல்களையும் அதன் தளத்திலேயே இடம்பெறச் செய்தது. ஆனால், அதுதான் பலருக்கு பிடிக்காமல் போவதற்கும் காரணமாய் அமைந்தது.
Yahoo ஒரே தொழில் மாதிரியை கடைபிடிக்காமல், தாங்கள் ஊடக (media) நிறுவனமா அல்லது ஒரு தொழில்நுட்ப நிறுவனமா (technology company) என்ற கேள்விகளுக்கு தெளிவில்லாமல் இருமுகதன்மையை பின்பற்றியது.
1998 ஆம் ஆண்டு கூகுளின் நிறுவனர்களான லேரி பேஜும், செர்ஜெரி ப்ரினும்அவர்களின் PageRank system தொழில்நுட்பத்தை யாகூவிடம் $1 மில்லியன் டாலருக்கு விற்க முயன்றனர். அவர்களின் PageRank system தொழில்நுட்பம் மிக விரைவாக தகவல்களை மற்ற இணையத்தளத்திலிருந்து தேடி கொடுக்கும். ஆனால் Yahoo நிறுவனம் எல்லா தகவல்களையும் தங்கள் தளத்திலேயே இடம்பெற செய்து இணைய பயனர்கள் தங்கள் தளத்திலேயே அதிக நேரம் செலவிடவேண்டும் என்று எண்ணி Google ன் PageRank system தொழில்நுட்பத்தை நிராகரித்தது.
ஆனால் Yahoo தகவல்களை மற்ற இணையத்தளத்திலிருந்து தேடி கொடுத்தலில்தான் மிகப் பெரிய சந்தை இருக்கிறது என்பதை கவனிக்க தவறிGoogle –ளிடம் தனது பயனர்களை பறிகொடுத்தது.
2000 ஆம் ஆண்டு Yahoo நிறுவனத்தின் சந்தை மதிப்பு $125 பில்லியன் டாலர். யாஹூ மிகவும் உச்சத்திலிருந்த தருணம் அது.
2001 ஆம் ஆண்டு Yahoo கிட்டத்தட்ட 400 வெவ்வேறு விதமான சேவைகளை கொண்டிருந்தது. ஆனால் Google தேடு பொறி என்ற ஒரே துறையில் கவனத்தை குவித்தது போல, Yahoo ஒரே துறையில் கவனத்தை (focus) குவிக்கவில்லை.
2002 ஆம் ஆண்டு Yahoo நிறுவனம் கூகுளை $1 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்க தாயராக இருந்தது. கூகுளின் நிறுவனர்களான லேரி பேஜும், செர்ஜிபிரின் $3 பில்லியன் டாலர் தொகை கேட்டனர். முன்னாள் யாகூ சிஇஓ Terry Semel இது சரியான விலை என நம்பினார்.
ஆனால் Semel ன் தளபதிகள் சிலர் $3 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்கும் அளவிற்கு Google ன் மதிப்பு இல்லை என கூறினர். இதனால் Yahoo நிறுவனம் google ஐ வாங்குவதை கைவிட்டது. ஆனால் இந்த இளம் Google நிறுவனம் தன்னையே இணையத்திலிருந்து வெளியே விரட்டிவிடும் என யாஹூ கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.
2005 ஆம் ஆண்டு யாஹூ நிறுவனம் இப்போது உலகின் மிகப் பெரிய இணையத்தள நிறுவனமான Alibaba -வில் $1 பில்லியன் டாலர் முதலீட்டு செய்து 40% பங்கை வாங்கியது.
இப்பொழுது உள்ள யாஹூவின் சொந்த மதிப்பை விட அது Alibaba -வில் செய்த முதலீட்டின் இன்றைய மதிப்பு அதிகமாகும்.
அதே ஆண்டில் Yahoo படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான Flickr-ஐ $25 மில்லியன் டாலருக்கு வாங்கியது.
2006 ஆம் ஆண்டு Yahoo Facebook ஐ $1 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்க தயாராக இருந்தது. Facebook ன் முதலீட்டாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் யாஹூவிடம் விற்பதற்கு விரும்பும் தெரிவித்தனர். Facebook அந்த சமயத்தில் News Feed -ஐ அறிமுகம் செய்திருந்தது. அது நன்றாக சென்றால் Facebook ன் மதிப்பு $1 பில்லியன் டாலரைவிட அதிகமாக இருக்கும் என மார்க் ஜுக்கர்பெர்க் நம்பினார். ஆனால் யாஹூ Facebook ஐ அதிகமான விலைக்கு வாங்க தயாராக இல்லை. எனவே மார்க் ஜுக்கர்பெர்க் அதை நிராகரித்தார்.
இன்று Facebook தன்னை வாங்க நினைத்த Yahoo வை விட மிகப் பெரிய நிறுவனமாக இருக்கிறது.
2008 ஆம் ஆண்டு Microsoft நிறுவனம் $44.6 பில்லியன் டாலர் தொகைக்கு யாகூவை வாங்க தயாராக இருந்தது. ஆனால், இந்த விலை மிகவும் குறைவு என நினைத்த யாகூ அதனை நிராகரித்தது. ஆனால் இதை விட மிகக் குறைந்த விலைக்கு விற்க போகிறோம் என்பதை Yahoo அன்று அறிந்திருக்கவில்லை.
2012 வரை குறுகிய காலத்தில் யாஹூவில் பல தலைமை செயல் அதிகாரிகள் (CEO) மாற்றப்பட்டனர். சிஇஓ க்கள் மாறியும் யாஹூ வளர்ச்சி பாதைக்கு செல்லவில்லை அதனால் திருப்தி அடையாத முதலீட்டாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கூகுள் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்த Marissa Mayer ஐ சிஇஓ வாக தேர்ந்தெடுத்தனர். ஆனால் ஏற்கனவே வீழ்ச்சியில் இருந்த யாஹுவை மரிசா மேயராலும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லமுடியவில்லை.
2013 ஆம் ஆண்டு microblogging மற்றும் சமூக வலைத்தளமான Tumblr தளத்தை 1.1 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியது யாகூ. ஆனால் Tumblrதளமும் வீழ்ச்சியை சந்தித்தது.
இப்போது மிகப் பெரிய தொலை தொடர்பு நிறுவனமான Verizon $4.8 பில்லியன் டாலருக்கு Yahoo ஐ வாங்கியிருக்கிறது. மிகப் பெரிய சாம்ராஜ்யமாக இருந்த யாஹூ படிப்படியாக வீழ்ந்து இன்று அடிபாதாளத்திற்கு சென்றுள்ளது. இணையத்தை தன் கையில் வைத்திருந்த Yahoo வின் தோல்வி நிச்சயம் மற்ற இணையம் சார்ந்த நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். Tks
tnentrepreneur.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக