திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து உதவி கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அரசு கல்லூரி
திருவாரூர் கிடாரங்கொண்டானில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்ககோரி கடந்த 3–ந் தேதி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வணிகவியல் பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் கல்லூரி மாணவர்களில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக கல்லூரியின் வணிகவியல்துறை துணைத்தலைவர் ராமு திருவாரூர் தாலுகா போலீசில் அளித்த புகாரில், தன்னையும், பேராசிரியர் சண்முகசுந்தரத்தையும், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவராமன் தூண்டுதலின் பேரில் மாணவர்கள் தாக்கியதாக கூறியிருந்தார். இதேபோல் கல்லூரி மாணவர் நீல்ஆம்ஸ்ட்ராங் போலீசில் அளித்த புகாரில், தன்னையும், தன்னுடன் படிக்கும் மாணவர்களையும், வணிகவியல் துறை துணைத்தலைவர் ராமு, பேராசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் மாணவர்கள் தாக்கியதாக கூறியிருந்தார். இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவராமன் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பேச்சுவார்த்தை
மாணவர்கள் இடையே நடந்த மோதலால் கடந்த 4–ந் தேதியில் இருந்து கல்லூரிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் மோதல் குறித்து திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் முத்துமீனாட்சி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு கல்லூரிகளின் தஞ்சை மண்டல இணை இயக்குனர் பியாட்ரிஸ்மார்க்ரெட், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவராமன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வருகிற 12–ந் தேதி கல்லூரியை மீண்டும் திறப்பது என்றும், மீண்டும் பிரச்சினையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக