செவ்வாய், 15 செப்டம்பர், 2015

திருத்துறைப்பூண்டி தொகுதியில் 2,16,573 வாக்காளர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 21,363 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களிடத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு மேலும் அவர் பேசியது:

5.1.2015 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 4,78,401 ஆண், 4,74,944 பெண், 7 இதர வாக்காளர்கள் என மொத்தம் 9,53,352 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

அதன்பிறகு 6.1.2015 முதல் 14.9.2015 வரை நடைபெற்ற தொடர் திருத்தத்தில் 6,632 ஆண், 8,683 பெண், 2 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15,317 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல, தொடர் திருத்தத்தில் 9,676 ஆண், 11,687 பெண் வாக்காளர் என மொத்தம் 21,363 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே, மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 4,75,357 ஆண், 4,71,940 பெண், 9 இதர வாக்காளர்கள் என மொத்தம் 9,47,306 வாக்காளர்கள் உள்ளனர்.

தொகுதி வாரியாக மொத்த வாக்காளர்கள் விவரம்: 15.9.2015-ன்படி திருவாரூர் தொகுதியில் 1,23,401 ஆண், 1,24,157 பெண், 9 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,47,567 வாக்காளர்களும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் 1,08,513 ஆண், 1,08,060 பெண் என மொத்தம் 2,16,573, மன்னார்குடி தொகுதியில் 1,17,145 ஆண், 1,18,487 பெண் என மொத்தம் 2,35,632, நன்னிலம் தொகுதியில் 1,26,298 ஆண், 1,21,236 பெண் என மொத்தம் 2,47,534 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் 1,150 மொத்த வாக்குச்சாவடிகள் உள்ளன. வரைவு வாக்காளாó பட்டியல் திருவாரூர் மற்றும் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை முதலும், செப். 19, 30 தேதிகளில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்திலும் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

ட்ற்ற்ல்:ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற வலைத்தளத்தில் வாக்காளர் பட்டியலை காணலாம்.

1.1.2016-ஐ தகுதிநாளாகக் கொண்டு 18 வயது முடிந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், செவ்வாய்க்கிழமை முதல் (செப். 15) அக். 14-ம் தேதி வரை வாக்குச்சாவடிகளிலும், செப். 20, அக். 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களிலும் பெயர் சேர்க்க மார்பளவு புகைப்படம், இருப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான ஆதாரத்துடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம். நீக்கம், திருத்தம் செய்ய வேண்டுமெனில் உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார் ஆட்சியர்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டும் பணி உலகநாதன் எம்.எல்.ஏ.அடிக்கல் நாட்டினார்

திருத்துறைப்பூண்டி டி.மு. கோர்டு சாலையில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை இயங்கி வந்தன. மன்னார்குடி சாலையில் விரைவு நீதிமன்றம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது.

திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும் என வக்கீல்கள் சங்கம், பொதுமக்கள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து அரசு ரூ.3 கோடியே 68 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்தது.


100 ஆண்டுகள் பழமையான மரங்கள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டன. மன்னார்குடி சாலையில் உள்ள விரைவு நீதிமன்றத்திற்கு, குற்றவியல் நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து டி.மு. கோர்டு சாலையில் உள்ள இடத்தில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி உலகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைமை நீதிபதி ஜாகீர்உசேன், மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி ராம் ஆகியோர் பூமிபூஜைக்கு அடிக்கல் நாட்டினர். இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் சங்க தலைவர் அருள்செல்வன், செயலாளர் ரஜினி, பொருளாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் -அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Image result for அரசு ஊழியர் சங்கதிருத்துறைப்பூண்டி பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு ஊழியர் சங்க கூட்டம்

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 12-வது வட்ட பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். வட்ட துணைத்தலைவர்கள் சத்தியராணி, ரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் அன்புமணி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட செயலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் வட்ட இணை செயலாளர் தர்மையன், வட்ட செயற்குழு உறுப்பினர் தனபால், வட்ட துணைத்தலைவர் சீனிவாசன், ஒன்றிய பொருளாளர் ஜெயபாலன், மாவட்ட இணை செயலாளர்கள் முருகானந்தம், வண்டார்குழலி உள்பட பலர் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிவேல் பேசினார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனபால் நன்றி கூறினார்.

வேளாண்மை கல்லூரி

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

திருவாரூர்-அகஸ்தியன்பள்ளி, காரைக்குடி அகல ரெயில் பாதை திட்ட பணியை விரைந்து முடித்திட வேண்டும். திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் மாதிரி கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு இடம் தேர்வு செய்தமைக்கு தமிழக அரசை பாராட்டுவது. மேலும் கட்டிடம் கட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும். திருத்துறைப்பூண்டி பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி தலைவராக சிவக்குமார், செயலாளராக மணிவண்ணன், பொருளாளராக வாசுமதி, துணைத்தலைவர்களாக வெங்கடேசு, ரூபன், ராமசாமி உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.

சனி, 12 செப்டம்பர், 2015

திருத்துறைப்பூண்டி அருகே தொழிலாளி மர்மச் சாவு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே வியாழக்கிழமை விவசாயத் தொழிலாளி மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருநெல்லிக்காவல் -புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன்(48). விவசாயத் தொழிலாளியான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொக்காலடி நடுத்தெருவில் தனது மனைவி வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மதியழகி (40), மகன் தமிழரசன் (22), மகள் நந்தினி (12) ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், முருகையன் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தமாகா பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே வியாழக்கிழமை இரவு தமாகா பிரமுகர் அரிவாளால் வெட்டப்பட்டார்.

முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் (40). தமாகா பிரமுகர். இவரது மனைவி புனிதா முத்துப்பேட்டை ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இவரது வீட்டுக்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் பாலசுந்தரத்தைத் தாக்கினர்.பலத்த காயமடைந்த அவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.இடப் பிரச்னை காரணமாக பாலசுந்தரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திங்கள், 7 செப்டம்பர், 2015

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் விமான நிறுவனத்தில் 598 அதிகாரி பணிகள்


விமான ஆணைய நிறுவனத்தில் 598 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய விமான ஆணையம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என்று குறிப்பிடப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இது மத்திய அரசின் மினிரத்னா அந்தஸ்து பெற்றது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு 400 பணியிடங்களும், ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 198 இடங்களும் உள்ளன. மொத்தம் 598 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணியிடங்களில் இட ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவினருக்கு 202 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 108 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 60 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 30 இடங்களும் உள்ளன.

அதேபோல ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பிரிவு பணியிடங்களில் ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவினருக்கு 76 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 63 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 42 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 17 இடங்களும் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 31-10-15 தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

பி.எஸ்சி. இயற்பியல், கணிதவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பாடங்களில் என்ஜினீயரிங்/டெக்னாலஜி பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் பூர்த்தி செய்தவர்கள் ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் என்ஜினீயரிங்/ தொழில்நுட்ப பட்டப்படிப்புடன், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பிரிவு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை :

ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு எழுத்து தேர்வின் அடிப்படையிலும், ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 2014, 2015-ம் ஆண்டுகளின் கேட் தேர்வு அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம் :

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஸ்டெப்-1, ஸ்டெப்-2 என இரு நிலைகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஸ்டெப்-1 படிவம் சமர்ப்பித்த பிறகு, கட்டணம் செலுத்திவிட்டு ஸ்டெப்-2 படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 9-10-15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு 13-10-15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது பற்றிய விரிவான விவரங்களை    www.aai.aero  என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka