திருத்துறைப்பூண்டி நகராட்சி வரி வசூலில் திருவாரூர் மாவட்டத்தில் முதலிடமும், 19 நகராட்சிகளை உள்ளடக்கிய தஞ்சை மண்டலத்தில் 2-வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொ) திருமலைவாசன் வெளியிட்ட அறிக்கை:
இரண்டாம் நிலை நகராட்சியான திருத்துறைப்பூண்டி நகராட்சியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் வரி வசூல் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, விடுமுறை நாள்களிலும் வரி வசூல் பணி நடைபெற்றது.
இதன் பயனாக, வரி வசூல் கேட்பில் குடிநீர் கட்டணம் 100 சதமும், சொத்து வரி 99 சதமும், வரி இல்லா இனங்கள் 95.76 சதமும், தொழில் வரி இனங்களில் 85 சதமும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
நகரில் உள்ள 24 வார்டுகளில் 6,7,9,10,11,12,13,14,17,18 ஆகிய வார்டுகளில் குடிநீóர் கட்டணம், சொத்து வரி 100 சதம் வசூல் செய்யப்பட்டுóள்ளது.
செம்மையாகப் பணியாற்றிய வருவாய் உதவியாளர்கள் எல். முனியமுத்து, சி. கார்த்திகேயன், அதிக வரி வசூல் செய்த ஜேம்ஸ்பால்ராஜ் ,டிஎன். தியாகராஜன், வருவாய் உதவியாளர் எல். ரவிச்சந்திரன் மற்றும் உரிய காலத்தில் வரி செலுத்திய பொதுமக்களுக்கும் நகர்மன்றத் தலைவர் ராஜேஸ்வரி செல்வராஜன், துணைத் தலைவர் ஆர்.எஸ். பாண்டியன் ஆகியோருக்கும் நன்றி
-TKS Dhinamani
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக