திருத்துறைப்பூண்டி, டிச. 19: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான பாப்பா உமாநாத் மறைந்ததையடுத்து, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற இரங்கல் ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டியில் ரயில்வேகேட் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் ஜோதிபாசு தலைமை வகித்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் அம்பேத்கர் சிலை அருகே நிறைவடைந்தது.
அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் எம்.பி.கே. பாண்டியன், பி.என். தங்கராஜு (மார்க்சிஸ்ட் கம்யூ.), ஆர்.எஸ். பாண்டியன் (திமுக), பா. எழிலரசன் (காங்.), வி. முத்துக்குமரன் (சி.பி.ஐ.), டி.ஜி. சண்முகசுந்தர் (அதிமுக), எஸ். சித்தார்த்தன் (தி.க.), பா. அன்பரசன் (மதிமுக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையில் நடைபெற்ற இரங்கல் ஊர்வலத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் க.வி. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
மன்னை சாலையில் ரயில்வே கேட் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் புதிய பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது.
இந்தக் கூட்டத்தில் பேரூராட்சித் தலைவர் எம்.எஸ். கார்த்திக் (திமுக), டி. சுப்பிரமணியன், ஏ. காளிமுத்து (சி.பி.எம்.), நா. ராஜ்மோகன் (தமிழ் இலக்கிய மன்றம்) மெட்ரோமாலிக் (காங்.), செ. மீனாட்சிசுந்தரம் (வி.சி.) சி. செல்லதுரை (அரசு ஊழியர் சங்கம்) உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றின
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக