செவ்வாய், 28 டிசம்பர், 2010

மிக முக்கிய தொலைபேசி எண்கள்

Contacts Phone Number

Government hospital (Gents) 04369 222459

Government Hospital (Women) 04369 222458

Police Station 04369 222450

Electricity board 04369 222444

Fire Station 04369 222401

Railway Station 04369 222431

New Busstand 04369 221717

Ambulance 04369 222125

Chamber of Commerce 04369 220344

Taxi Stand 04369 221155

நம்ம MLA பற்றி (Bio-data)


பிறந்த தேதி விபரம் ---- 25 - 5 -1954

படிப்பு ----- 10 ம் வகுப்பு வரை

திருமண நிலை ----- திருமணமானவர்

தொழில் ---- விவசாயம்

சென்னை முகவரி ----- D 4 A, MLA's Quraters,
Omanthurar Government Estate,
Chennai - 600 002.
Telephone Number
(Chennai) 044 - 25387945

ஊர் முகவரி பெரிய சிங்களாந்தி
04369 - 221927, 221456

சர்வதேச செஸ் போட்டி: திருத்துறைப்பூண்டி மாணவர் நான்காமிடம்

திருத்துறைப்பூண்டி, டிச. 27: சர்வதேச செஸ் போட்டியில் திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் மழலையர் பள்ளி மாணவர் நான்காமிடம் பெற்றார். இந்தப் பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர் கே. கஸ்தூரி மகாலிங்கம் அண்மையில் மதுரையில் நடைபெற்ற 10 வயதுக்குள்பட்டோருக்கான சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்று, தரவரிசைப் பட்டியலில் நான்காமிடத்தைப் பெற்றார். மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தை பள்ளி நிர்வாகி ஜெசிகொன்சிலியா, தலைமை ஆசிரியை சந்திரா ஆகியோர் பாராட்டி, ரூ. 5ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினர்

திங்கள், 27 டிசம்பர், 2010

வீட்டு மனை பட்டா வழங்க கோரி இந்திய கம்யுணிஸ்ட் கட்சி(CPI) ஆர்பாட்டம்



டிச 27 வீட்டு மனை பட்டா வழங்க கோரி இந்திய கம்யுணிஸ்ட் கட்சி சார்பில் ஆர்பாட்டம் விடாத மழையில் நடைபெற்றது மக்கன் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர் சுமார் 12 மணிக்கு தாலுக்கா அலுவலகத்தை அடைந்த மக்கள் தோழர்கள் உரையாற்றினார்கள் புகைபட தொகுப்பு

ஆட்கள் தேவை

அடோப் போட்டோ ஷாப் இல்லஸ்ட்ரேட்டர்
நன்கு தெரிந்த ஆட்கள் தேவை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்
9894929809

கிருஷ்ணா ஃப்ளக்ஸ் மற்றும் கிருஷ்ணா நிருவண அதிபர்கள்(சகோதரர்கள்) சங்கர் கணேஷ் மற்றும் ஜெயா இவர்களின் தகப்பனார் காலமாணார்

இரங்கல் மற்றும் ஆறுதலுக்கு
சங்கர் 9442992911
ஜெயா 9842923122

வீரா வீடியோஸ் ராம்கியான் புதிய தலைமுறை பத்திரிக்கையில்...

திருத்துறைப்பூண்டியில் முன்னோடி புகைப்பட கலைஞரும் தற்கால ஃபிளக்ஸ் பிரிண்டிங் நிறுவண அதிபருமான திரு ராம்கியான் (ஜெயராமன்) புதிய தலைமுறை பத்திரிக்கையில் வழிகாட்டி பகுதியில் இடம் பெற்று நமது ஊர் பெருமையை பறைசாற்றினார்
அவர் இருபது வருடங்களுக்கு முன் தன் வாழ்வில் பெற்ற படிப்பினை மற்றும் ஆரம்ப கால துயரங்களை விளக்கி கூறியுள்ளார் பேட்டி இடம் பெற்ற பக்கம் 34&35
அவரின் அலைபேசி எண் 9942943673(வாழ்த்து கூற)
அவர் பணி சிறக்க thiruthuaipoondi blogspot வாழ்துகிறது
விரைவில் முழு செய்தியும் இடம் பெறும்....

சனி, 25 டிசம்பர், 2010

திருத்துறைப்பூண்டி நகராட்சி முதலிடம்

திருத்​து​றைப்பூண்டி நகராட்சி வரி வசூலில் திருவாரூர் மாவட்டத்தில் முதலிடமும்,​​ 19 நகராட்சிகளை உள்ளடக்கிய தஞ்சை மண்டலத்தில் 2-வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளது.
​ ​ இதுகுறித்து நகராட்சி ஆணையர் ​(பொ)​ திருமலைவாசன் வெளியிட்ட அறிக்கை:
​ ​ இரண்டாம் நிலை நகராட்சியான திருத்துறைப்பூண்டி நகராட்சியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் வரி வசூல் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு,​​ விடுமுறை நாள்களிலும் வரி வசூல் பணி நடைபெற்றது.
​ ​ இதன் பயனாக,​​ வரி வசூல் கேட்பில் குடிநீர் கட்டணம் 100 சதமும்,​​ சொத்து வரி 99 சதமும்,​​ வரி இல்லா இனங்கள் 95.76 சதமும்,​​ தொழில் வரி இனங்களில் 85 சதமும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
​ ​ நகரில் உள்ள 24 வார்டுகளில் 6,7,9,10,11,12,13,14,17,18 ஆகிய வார்டுகளில் குடிநீóர் கட்டணம்,​​ சொத்து வரி 100 சதம் வசூல் செய்யப்பட்டுóள்ளது.
​ ​ செம்மையாகப் பணியாற்றிய வருவாய் உதவியாளர்கள் எல்.​ முனியமுத்து,​​ சி.​ கார்த்திகேயன்,​​ அதிக வரி வசூல் செய்த ஜேம்ஸ்பால்ராஜ் ,டிஎன்.​ தியாகராஜன்,​​ வருவாய் உதவியாளர் எல்.​ ரவிச்சந்திரன் ​ மற்றும் உரிய காலத்தில் வரி செலுத்திய பொதுமக்களுக்கும் நகர்மன்றத் தலைவர் ராஜேஸ்வரி செல்வராஜன்,​​ துணைத் தலைவர் ஆர்.எஸ்.​ பாண்டியன் ஆகியோருக்கும் நன்றி
-TKS Dhinamani

திருத்துறைப்பூண்டி பகுதியில் குளங்கள் மேம்படுத்தப்படுமா?

திருத்துறைப்பூண்டி நகராட்சிப் பகுதியில் உள்ள குளங்களை மேம்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப் பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நீரின்றி அமையாது உலகு என்ற வழக்கின்படி நமது நாட்டை, மன்னர்கள் ஆண்டபோதும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியிலும் கிராமம், நகரம் என்ற பாகுபாடின்றி நீர்நிலைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்தனர்.
அனைத்துப் பகுதிகளிலும் கிராம வாரியாக நீர்நிலைகள், ஏரிகள், உபரிநீர் வழிந்தோடும் வகையில் நீர்நிலை புறம்போக்குகள், மாடுகள் மேய்ச்சலுக்கு என மேய்ச்சல் புறம்போக்கு எனப் பொதுமக்களின் உபயோகத்திற்காக அரசு சில வகை நிலங்களைத் தரம் பிரித்து வைத்தது.
அரசு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசின் சார்பில் அத்தகைய புறம்போக்கு நிலங்களை வகை மாற்றம் செய்து வீட்டுமனைப் பட்டா வழங்குவதிலும்கூட நீர்நிலைப் புறம்போக்குக்களை மட்டும் வழங்க தடை இன்றும் நீடிக்கிறது.
ஆனால், நீர்நிலைப் புறம்போக்குகளிலும், ஆற்றின் கரைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால், ஆண்டுதோறும் வெள்ளம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் இதுபோன்ற நிகழ்வுகளில் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தடை ஆணை வழங்கக் கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக முன்னறிவிப்பின்றி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. ஆயினும், இந்தச் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படாமல் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.
திருத்துறைப்பூண்டி நகராட்சிப் பகுதியில் உள்ள நீர்நிலை புறம்போக்குகளை ஆக்கிரமித்து, அரசுக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதிய பேருந்து நிலையம் எதிரே ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் வணிக வளாகம், நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது. அரசு விதைவிடு குளத்தில்தான் புதிய பேருந்து நிலையமே கட்டப்பட்டுள்ளன. இன்னும் பலர் குளங்களைத் தூர்த்து அடுக்கு மாடி வீடு கட்டி உள்ளனர். நகரில் நீர் வடிவதற்கான அனைத்து நீராதாரங்களும் தூர்ந்துவிட்டன.
நகரில் 32 குளங்கள் உள்ளன. நகரின் மையப் பகுதியில் உள்ள நகாட்சிக்கு முன்புறம் உள்ள ராமர் மடக்குளம், பின்புறம் உள்ள நந்தவனக் குளம், செங்கமலக்குளம் உள்ளிட்ட குளங்கள் தண்ணீர் வந்து செல்ல வழியின்றி, மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் கேந்திரங்களாக மாறி, நகரின் சுகாதாரக் கேட்டிற்கு பெரிதும் காரணமாக உள்ளன. இந்தக் குளங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து கைப் பம்புகளில் தண்ணீர் வருவதே இல்லை. மேலும், இந்தக் குளங்கள் பராமரிக்கப்படாததால், பொதுமக்கள் தாங்கள் குளிப்பது உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரையே பயன்படுத்தும் கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர்.
எனவே, உரிய ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகள், அரசியல் கட்சியினர் என எந்தப் பாகுபாடும் இன்றி அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், நகரில் உள்ள 32 குளங்களுக்கும் தண்ணீர் வந்து செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும்,குளங்களில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளையும் அகற்றி குளங்களை மேம்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு -ஏ.ரவி(Dhinamani)

தமிழகத்தை சுனாமி தாக்கியதன் 6வது ஆண்டு தினம்-கடற்கரைகளில் மக்கள் கண்ணீர் அஞ்சலி




சென்னை: தமிழகம் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளை மாபெரும் சுனாமி அலைகள் தாக்கியதன் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தைத் தொடர்ந்து சுனாமி அலைகள் எழுந்தன. இந்தோனேசியாவில் புறப்பட்ட அந்த அலைகள் இந்தியாவின் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை பெரும் சீரழிவை ஏற்படுத்தி ஓய்ந்தன.

மனித குலம் காணாத இந்தப் பெரும் பேரழவுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழகத்தில் நாகப்பட்டனம், கடலூர், சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் சுனாமியால் கடும் பாதிப்பை சந்தித்தன. பல ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. பல ஆயிரம் மீனவர்கள் வீடுகள், உறவுகளை இழந்து தவிப்புக்குள்ளாகினர். பல நூறு பேரைக் காணவில்லை.

ஒரு சில மணி நேரங்களில் ஒட்டுமொத்த தமிழக கடலோரமும் பிணக்காடாகிப் போனது. தமிழகத்தை மட்டுமல்லாமல் இலங்கையின் கடலோரப் பகுதிகளையும் புரட்டிப் போட்டு விட்டது சுனாமி. அதேசமயம், இலங்கையை சுனாமி அலைகள் தாக்கியதன் மூலம் தமிழகத்திற்கு வரவிருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், தமிழகத்தை சுனாமி தாக்கியபோது அலைகளின் வேகம் சற்று மட்டுப்பட்டதால்தான் மிகப் பெரிய அசம்பாவிதம் நேராமல் போனதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆனால் எப்படித் தாக்கியிருந்தால் என்ன, இந்தத் தாக்குதலுக்கே பல ஆயிரம் பேரைப் பறி கொடுத்து பெரும் சேதத்தையும் சந்தித்து விட்டது கடலோரத் தமிழகம்.

அந்த சோக சம்பவத்தின் 6வது நினைவு தினம் இது. ஆழிப் பேரழிவு என்பதை வரலாற்று நூல்களில் மட்டுமே படித்திருந்த இந்த உலக மக்களுக்கு முதல் முறையாக அதை நேரில் காணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது இயற்கை.

என்றும் மக்கள் மனதிலிருந்து நீங்காத சோக நிகழ்வான இன்று, கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டிம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாகப்பட்டனம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளின் கடலோரப் பகுதிகளிலும் மக்கள் அலை அலையாக வந்து மறைந்த தங்களது குடும்பத்தினர், சொந்த, பந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கடற்கரைகளில் பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

ஆர். வெங்கட்ராமன் (எழுத்தாளர்)

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாடு, திருத்துறைப்பூண்டியில் பிறந்த ஆர்வி தேசிய இயக்கத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தில், காந்தீய சித்தாந்தங்களில் பற்றும் ஈடுபாடும் கொண்டு விளங்கியவர். 1941 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தனிநபர் சத்தியாகரகத்தில் ஈடுபட்டதால் கைதாகி தஞ்சாவூர் பாபநாசம் சிறையில் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியராக இருந்த க. சந்தானத்துடன் பத்திரிகைத் துறையில் சேருவதற்காக 1942 இல் சென்னை வந்தார்.
சென்னைக்கு வந்த மறுநாள் மயிலாப்பூரில் இருந்த கலைமகள் காரியாலயத்தில் கி. வா. ஜகந்நாதனைச் சந்தித்து பத்திரிகைத் துறையில் தனக்கிருந்த ஈடுபாட்டைக் கூறினார். உடனேயே கா.ஸ்ரீ.ஸ்ரீநிவாசாச்சாரியாருக்கு அருகில் இடம் தந்தார்கள். பத்திரிகைக்கு வரும் கதைகளைப் பதிவு செய்வதோடு அவற்றைப் படித்துவிட்டு, தேறக்கூடிய கதைகளை ஆசிரியரின் பார்வைக்காக எடுத்து வைக்கும் வேலையை முதலில் தந்தார்கள்.
அதைத் தொடர்ந்து 1950 இல் சிறுவருக்கென்று கண்ணன் பத்திரிகையும் தொடங்கப்பட்டு அதன் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். "கண்ணனில்" ஆர்வி ஏராளமான சிறுகதைகளையும், சித்திரக்கதைகளையும், தொடர்கதைகளையும் மற்றும் புதினக்களையும் எழுதினார். இவரின் எழுத்துக்கள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இவரது புதினங்கள் கல்கி, சுதேசமித்திரன் ஆகிய வார இதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. இவரது மிகச் சிறந்த நாவல்கள் என்று பலராலும் பாராட்டப் பெற்ற அணையா விளக்கு, திரைக்குப் பின், ஆதித்தன் காதல் போன்ற நாவல்கள் சுதேசமித்திரனில் வெளியானது. பதினெட்டுக்கு மேற்பட்ட நாவல்கள், பதினான்கு சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர்களுக்காக பத்துக்கு மேற்பட்ட புதினங்கள், பதினைந்துக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு மொழி பெயர்ப்பு நூல்கள், பதினைந்துக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள், கட்டுரைகள் என எழுதிக் குவித்திருக்கிறார் ஆர்வி.
1946 இல் கல்கியைத் தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் செயலாளராக ஆர்வி திகழ்ந்தார். 1960 இல் தி. ஜானகிராமன், ந. சிதம்பர சுப்ரமணியன், தி.ஜ.ர., க. சோமசுந்திரம், நாரண துரைக்கண்ணன் ஆகியோரைக் கொண்டு தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்கினார். சென்னையில் தேசிய பத்திரிகையாளர் சங்கத்தை உருவாக்கினார். இந்திய எழுத்தாளர் அமைப்பின் சென்னைக்கிளை உருவாகச் செயல்பட்டு, அதன் செயல் உறுப்பினராய்ப் பல காலம் பணியாற்றினார். குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் சில காலம் பணியாற்றியிருக்கிறார்.
தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, மற்றும் பாரதி லட்சுமணன் அறக்கட்டளையும், இலக்கியச் சிந்தனையும் இணைந்து வழங்கிய பம்பாய் ஆதி லட்சுமணன் நினைவுப் பரிசான ரூ 15000 (2003) என்று பலவற்றைப் பெற்றிருக்கிறார்.
[தொகு]ஆர்வியின் புதினங்கள் குறித்த ஆய்வு

ஆர்வி அவர்களின் சிறுவர் இலக்கியப் புதினங்களை விரிவாக ஆய்வு செய்து 2008 இல் 'சிறுவர் இலக்கியத்தில் ஆர்வி படைத்த கண்ணன் நாவல்கள்' என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார் "ரேவதி" என்ற புனைபெயரில் குழந்தைகளுக்கான ஏராளமான கதைகளையும், நாவல்களையும் எழுதிய குழந்தை எழுத்தாளர் ஈ. எஸ். ஹரிஹரன்.
மொத்தம் 14 உள்ளுறைகளை கொண்டுள்ளது இந்நூல். ஆர்வி அவர்களின் அசட்டுப்பிச்சு, சைனா சுசூ!, ஐக்கு, ஐக்கு துப்பறிகிறான், சந்திரகிரிக் கோட்டை, காளி கோட்டை இரகசியம், புதிய முகம், ஜம்பு, காலக் கப்பல்,ஒருநாள் போதுமா?, லீடர் மணி ஆகிய நாவல்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
[தொகு]மறைவு

சிறிது காலம் உடல் நலமின்றி இருந்த ஆர்வி வெள்ளிக்கிழமை (29/08/2008) மாலை சென்னையில் காலமானார். ஆவருக்கு மனைவியும் 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.

பாப்பா உமாநாத் மறைவுக்கு இரங்கல்

திருத்துறைப்பூண்டி,​​ டிச.​ 19:​ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான பாப்பா உமாநாத் மறைந்ததையடுத்து,​​ திருத்துறைப்பூண்டி,​​ முத்துப்பேட்டையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற இரங்கல் ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
​ ​ ​ திருத்துறைப்பூண்டியில் ரயில்வேகேட் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் ஜோதிபாசு தலைமை வகித்தார்.​ நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் அம்பேத்கர் சிலை அருகே நிறைவடைந்தது.
​ ​ அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் எம்.பி.கே.​ பாண்டியன்,​​ பி.என்.​ தங்கராஜு ​(மார்க்சிஸ்ட் கம்யூ.),​​ ஆர்.எஸ்.​ பாண்டியன் ​(திமுக),​​ பா.​ எழிலரசன் ​(காங்.),​​ வி.​ முத்துக்குமரன் ​(சி.பி.ஐ.),​​ டி.ஜி.​ சண்முகசுந்தர் ​(அதிமுக),​​ எஸ்.​ சித்தார்த்தன் ​(தி.க.),​​ பா.​ அன்பரசன் ​(மதிமுக)​ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
​ ​ முத்துப்பேட்டை:​​ முத்துப்பேட்டையில் நடைபெற்ற இரங்கல் ஊர்வலத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் க.வி.​ ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
​ ​ மன்னை சாலையில் ரயில்வே கேட் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் புதிய பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது.
​ ​ ​ இந்தக் கூட்டத்தில் பேரூராட்சித் தலைவர் எம்.எஸ்.​ கார்த்திக் ​(திமுக),​​ டி.​ சுப்பிரமணியன்,​​ ஏ.​ காளிமுத்து ​(சி.பி.எம்.),​​ நா.​ ராஜ்மோகன் ​(தமிழ் இலக்கிய மன்றம்)​ மெட்ரோமாலிக் ​(காங்.),​​ செ.​ மீனாட்சிசுந்தரம் ​(வி.சி.)​ சி.​ செல்லதுரை ​(அரசு ஊழியர் சங்கம்)​ உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றின

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka