புதன், 13 ஏப்ரல், 2016

நாளை முதல் மீன்பிடித் தடைக்காலம் அமல்

ஏப். 15-ம் தேதி முதல் 45 நாள்களுக்கு  மீன்பிடித் தடைக்காலம் அமலாகிறது.

1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் உள்பிரிவுகளின் கீழ், கடல் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் கிழக்குக் கடலோரப் பகுதி மீன்பிடிப்புத் தொழிலுக்கு ஏப். 15-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கடல்பகுதிகளில் இந்த தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துரைக்காடு, ஜாம்பவானோடை, ஆலங்காடு, வடக்கு வெள்ளாதிக்காடு, செங்கங்காடு, கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு உள்ளிட்ட கடலோரக் கிராமங்களில் உள்ள 5,000 மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லமாட்டார்கள்.

ஆனால், சிறிய கட்டுமரங்களில் குறுகிய தொலைவில் மீன்பிடிக்கலாம் என்றும்,  சுருக்குவலை, இரட்டைவலை பயன்படுத்தும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லமாட்டார்கள்  என்றும் மீன்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka