வியாழன், 28 ஏப்ரல், 2016

சித்த மருத்துவ பயிற்சி


திருத்துறைப்பூண்டி : தமிழ் மாநில சித்த மருத்துவ கழக மாதாந்திர பயிற்சி வகுப்புகள் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. மாநில தலைவர் டாக்டர் ரவீந்திரன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் தேவூர் மணிவாசகம், செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். மேட்டுபாளையம் வைத்தியர் அன்பழகன் வரவேற்றார். குழந்தைகளுக்கு 20 விதமான அறிகுறிகளுடன் காணப்படும் ஆட்டிசம் மூளை, நரம்பு, செல் பாதிப்புகளுக்கு வசம்பு, துளசி, குப்பைமேனி, வல்லாரை, சிறுசெருப்படை போன்ற மூலிகைகள் குணமாகும் என்று பயிற்சி வகுப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.  வைத்தியர்கள் திருவாரூர் புகழேந்தி, வாய்மேடு வெங்கடாசலம், மன்னார்குடி மணிமாறன், வெளிப்பாளையம் பாலசுப்பிரமணியன், மணக்காடு பாலசுப்பிரமணியன், நீலப்பாடி இங்கர்சால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka