செவ்வாய், 12 ஏப்ரல், 2016

சர்க்கரை நோய்க்கு புதுக்கருவி!

சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய், அமைதியான உயிர்க்கொல்லி. இது பரம்பரையாக வரும் நோய். தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக உள்ளனர். நாகப்பழக் கொட்டையும் சிறுகுறிஞ்சான் செடியின் இலையும் நித்திய கல்யாணி சிறு செடியின் பூவும் இதற்கு மருந்தாகும் என்று சித்த மருத்துவம் சொல்கிறது. ஆங்கில மருத்துவம் ஊசி மூலம் இன்சுலினை உடலில் செலுத்துகிறது.

தற்போது சர்க்கரை நோயைப் போக்குவதற்கு புதிய சிறு கருவி ஒன்று அறிவியல் ஆய்வால் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு "டையமண்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது. (டயபெட்டிக் இம்ப்ரூவ்மெண்ட் அண்டு மெட்டபாலிக் நார்மலிசேஷன் டிவைஸ் என்ற ஆங்கிலத் தொடரின் சொற்களிலுள்ள முதலெழுத்துகளை இணைத்து "டயமண்டு' என்ற ஆங்கிலப் பெயர் உருவாக்கப்பட்டது. இதை இங்கிலாந்து நாட்டின் மெட்டா க்யூர் என்ற ஆய்வகம் தயாரித்துள்ளது. இது தீப்பெட்டி அளவுள்ள கருவி. இது வயிற்றுப் பாகத்தில் தோலின் அடிப்புறத்தில் பொருத்தப்படும். இதைப் பொருத்திக் கொண்டவர், சாப்பிடும்போது இக் கருவி வயிற்றுத்தசைகளைத் தூண்டும். அதன் விளைவாக இன்சுலின் அதிகமாகச் சுரக்கும். அதன் காரணமாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். வியன்னாவிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகம், இந்தப் புதுக்கருவியை மனிதரின் உடலில் பொருத்திச் சோதனை செய்தது. மூன்று மாத கால அளவில் நோயாளியின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்துவிட்டது என்பது கண்டறியப்பட்டது.

நன்றி
இளைஞர் மணி 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka