திங்கள், 26 ஜனவரி, 2015

விவசாயிகள் கண்டுபிடிக்கும் புதிய பயிர் ரகங்களை பதிவு செய்து பயன் பெறலாம் கலெக்டர் பேச்சு

திருவாரூர்,: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் தாவர இரகங்கள் மற்றும் உழவர்களின் உரிமைகள்  பாதுகாப்புச் சட்டம் தொடர்பான விழ்ப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தஞ்சை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர்  சாமிஅய்யன், வேளாண் இணை இயக்குனர் மயில்வாகனன், கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர்  ரவிசங்கர், வேளாண் துணை இயக்குனர் நடேசன், நீடாமங்கலம் அறிவியல் நிலைய தலைவர் சோழன் மற்றும் நெல்.ஜெயராமன், தஞ்சை சித்தர்,  லால்குடி செந்தில்குமார், மற்றும் விவசாய பிரதிநிதிகள், வேளாண் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கை துவக்கி வைத்து  கலெக்டர் மதிவாணன்  பேசியதாவது,
தாவர ரகங்கள் மற்றும் உழவர்களின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், தாவர ரகங்களை பாதுகாப்பதற்கும் உழவர்கள் மற்றும் புதிய ரகங்கள்  அபிவிருத்தியில் ஈடுபடும் வல்லுநர்கள் இல்லாது விஞ்ஞானிகள், இனப் பெருக்காளர்கள் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசால் 2001ம் ஆண்டு  கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் முக்கிய நோக்கங்களாக தாவர மரபணு ஆதாரங்களை பாதுகாத்து பாரம்பரிய ரகங்களை பயன்பாட்டிற்கு  கிடைக்கச் செய்து, அதன் மூலம் புதிய ரகங் களை உருவாக்க வழிவகுத்த உழவர்களை அங்கீகரித்து, அவர்களின் உரிமைகளை பாதுகாப்பது மேலும்  உழவர்களினால் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய ரகங் களைக் கொண்டு அதை தாவர மரபியல் வளம் சேமிப்பு கிடங்கில் சேமித்து, புதிய ரகங்களை  உருவாக்க துணைபுரிவதை அங்கீகரித்தல், மற்றும் விஞ்ஞானிகள் உரிமைகளை பாதுகாப்பதன் மூலம் ரகங்களை மேம்படுத்துவது, புதிய ரகங் களை  உருவாக்குவதற்கான ஆராய்ச்சியில் பொது மற் றும் தனியார் துறைகளின் முதலீட்டை ஊக்குவிப்பது, பாதுகாப்பான உயர்ரக விதை மேம்பாட்டின்  மூலம் உயர்ந்த ரக தாவரங்கள் மற்றும் ரகங்கள் உழவர்களுக்கு கிடைக்கச் செய்திடுவது மற்றும் நாட்டின் விதை உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு  உதவுவது ஆகும்.
உழவர்கள் தங்கள் அனுபவத்தால் புதிய ரகத்தை கண்டறிந்தால் அவற்றை விஞ்ஞானிகள் போல் பதிவு செய்து உரிமை பெறலாம். இந்த சட்டத்தின்கீழ்  பதிவு செய்த ரகங்கள் சாகுபடி செய்யும்பொழுது எதிர்பார்த்த பலனை தரவில்லை என்றால் உழவர்கள் இழப் பீடு பெற இச்சட்டத்தின் 39(2)ல்  வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆணையத் தால் எடுக்கப்படும் முடிவுகளுக்கு உழவர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் ஆணைய தீர்ப் பாயம்  அல்லது ஐகோர்ட்களில் வழக்கு தொடர எந்த தொகையும் கட்ட வேண்டியதில்லை. மேலும் உழவர்கள் உரிமை சட்டம் பாகம் 26ன் கீழ்  தனிநபரோ  அல்லது குழுக்களோ லாப பங்கீடுகளை பெற தகுதியுடையவர்கள் ஆவர். எனவே உழவர்கள் தாங்கள் கண்டுபிடிக்கும் புதிய ரகங் களை உழவர்  பாதுகாப்பு உரிமைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்து பலனடையுமாறு விவசாயிகளை கேட்டுகொள்கிறேன். இவ் வாறு கலெக்டர் பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka