வியாழன், 29 ஜனவரி, 2015

திருத்துறைப்பூண்டி முழுவதும் குடியரசு தின விழா-ஓர் பார்வை

திருத்துறைப்பூண்டி, :திருவாரூர் மாவட்டம் முழுவதும் குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமையாசிரியர் சுசிலா தலைமை  வகித்தார். கவுன்சிலர் தமிழ்மணி,பிடிஏ தலைவர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் கைலாசம், ஊராட்சி துணைத் தலைவர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பழனியப்பன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் சிவகுமார் கொடியேற்றினார். பள்ளியில் 10, 12 ம்வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற அகல்யா, அருண் ஆகியோருக்கு முன்னாள் ராணுவ வீரர் முல்லை வீ.பெரியசாமி தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கினார். விழாவில் கிராம கல்விக் குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் மணிவேலன் நன்றி கூறினார்.
திருத்துறைப்பூண்டி: தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மதியழகன் கொடியேற்றினார். எம்எல்ஏ அலுவலகத்தில் எம்எல்ஏ உலகநாதன், டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி கண்ணதாசன், மகளிர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, எல்ஐசி கிளை அலுவலகத்தில் கிளை மேலாளர் பாலசங்கர், மின் வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் அழகேசன் ஆகியோர் கொடியேற்றினர். நகராட்சி அலுவலகத்தில் தலைவர் உமாமகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். துணைத் தலைவர் பாண்டியன், பொறியாளர் ராஜகோபால், கவுன்சிலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் வேதநாயகி சிங்காரவேலு கொடியேற்றி வைத்தார். ஆணையர்கள் தமிழ்மணி, அருள்சேகரன், மேலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேசிய உதவி தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் ஜேசீஸ் சங்க தலைவர் சிவசைலம், செயலாளர் அரவிந்த், பொருளாளர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிடிஏ தலைவர் மாரிமுத்து கொடியேற்றினார்.
நீடாமங்கலம்:  தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பழனிவேல் கொடியேற்றினார். மண்டல துணை தாசில்தார் ரெஜ்யாபேகம், ஆர்.ஐ.சின்னையன் உள் ளிட்ட பலர் கலந்து கொண் டனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியகுழு தலைவர் ராஜேந்திரன் கொடியேற்றினார். துணைத் தலைவர் குபேந்திரன், கூடுதல் ஆணையர் உஷா ராணி உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அறிவழகன், செயின்ட் ஜீட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிடிஏ தலைவர் கோவிந்தராஜன் கொடி ஏற்றினார். தாளாளர் நடரா ஜன் வரவேற்றார். துணைத் தலைவர் ராஜகோபால், நிர்வாக இயக்குனர் விக்னேஷ்,செயலாளர் அநிரூபிதா, மூத்த முதல்வர் சுகுணவதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் சார்லஸ் நன்றி கூறினார்.
நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விழாவில் தாளாளர் நீலன் அசோகன், முதல்வர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். நற்பணி மன்றம் சார்பில் ஆலோசகர் மனோகரன், கூத்தாநல் லூர் நகராட்சியில் தலைவர் ஜெயராஜ் கொடி ஏற்றினர். காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நடராஜன், கூத்தாநல்லூர் ஆக்கோர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் அஷ்ரப்அலி கொடிஏற்றினர். முத்துப்பேட்டை வர்த்தக கழகம் சார்பில் தலைவர் ராஜாராம் கொடியேற்றினார்.பொதுச் செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் நெய்னா முகம்மது, துணைச் செயலா ளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் இர்பான் ஹைதர் அலி, மீனா கணே சன் கலந்து கொண்டனர்.
கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழுத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை உமா மகேஷ்வரி, ஓய்வு ஆசிரியை தமிழரசி, பிடிஏ இணை செயலாளர் திருநாவுக்கரசு, கல்வி குழுத் துணைத் தலைவர் குணசேகரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் செந்தில் காந்தி, ஜகபருல்லா கலந்து கொண்டனர். ஆசிரியை மாலினி நன்றி கூறினார். ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் நடராஜன், குன்னலூர் ஊராட்சியில் தலைவர் ஆடலரசன் கொடியை ஏற்றினர்.
காங்கிரஸ் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உப்பூர் வீரசேகரன், நாச்சிக்குளத்தில் மாவட்ட துணைத் தலைவர் நாச்சிக்களம் தாகிர் கொடி ஏற்றினர். கிளார்வெளி துவக்கப் பள்ளியில் தலை மை ஆசிரியர் தங்கபாபு, ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி, துணைத் தலைவர் சாந்தி பிடிஏ தலைவர் ராமமூர்த்தி ஏஇஓ ராஜேந்திரன்,ஆசிரியர் கண்ணன், சத்துணவு அமைப்பாளர்கள் ஜெயந்தி, தமிழ்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka