வெள்ளி, 23 ஜனவரி, 2015

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்-மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்


திருவாரூர் மாவட்டத்தில் 2015-16 ஆம் நிதியாண்டில் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாருவதற்கு விவசாயிகளின் பாசன கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

திருவாரூரில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை சார்பில் மேற்கொள்ளவுள்ள ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் குறித்த விவசாயிகளின் கருத்துக்கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆட்சியர் மேலும் பேசியது:

மாவட்டத்தில் சுமார் 3,77,779 ஏக்காó விவசாய பாசன நிலங்களுக்கு 27 முதன்மை ஆறுகள் மற்றும் 651 அ பிரிவு வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி அளிக்கப்படுகிறது.

நிகழாண்டு சம்பா சாகுபடி 1,22,740 ஹெக்டேரில் சம்பாவும், 25,953 ஹெக்டேரில் தாளடியும் சாகுபடி செய்யப்பட்டது. சரியான நேரத்தில் மழை பெய்ததால் பயிர்கள் நல்ல நிலையில் வளர்ந்து கூடுதல் மகசூல் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் 28 ஏரிகளும், 4245 ஊராட்சிக் குளங்களும் உள்ளன என்றார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயசந்திரன், தஞ்சாவூர் கீழ்காவிரி வடிநில வட்ட சிறப்புத் தலைமைப் பொறியாளர் சி. சம்பத், மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka