திங்கள், 12 ஜனவரி, 2015

புகையில்லா பொங்கல் கொண்டாட ஆட்சியர் அறிவுறுத்தல்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், பொங்கல் பண்டிகையின்போது பழையப் பொருள்களை தீயிட்டு கொளுத்தி மாசடைய வைக்காமல் புகையில்லா பொங்கலை கொண்டாடுங்கள் என்றார் ஆட்சியர் எம். மதிவாணன்.

நன்னிலம் பேரூராட்சியில் திங்கள்கிழமை பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது:

போகிப் பண்டிகையின்போது பழைய தேவையற்ற பொருள்களை தீயிட்டு கொளுத்துவதென்பது தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போகியன்று டயர், ரப்பாó பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருள்களையும் சேகரித்து எரிப்பதால் நச்சுப் புகை ஏற்பட்டு சுகாதாரக்கேடு உருவாகிறது. இதனால், மக்களுக்கு புற்றுநோய், சுவாச கோளாறுகள், இருமல், கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

எனவே, தேவையற்ற பொருள்களை எரிக்கவோ, தெருக்களில் வீசியெறியவோ வேண்டாம். மேலும், தேவையற்ற கழிவுப் பொருள்கள் உள்ளாட்சி பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருவதால் இப்பொருள்களை மறுபயன்பாட்டிற்கு உரிய வை, மக்கக் கூடியவை, மறுசுழற்சிக்குரியது மற்றும் மறுசுழற்சியற்றவை என தனி தனியாக பிரித்து வழங்க வேண்டும்.

தேவையற்ற பொருள்களை தீயிட்டு கொளுத்துவதை நிறுத்திவிட்டு, புகையில்லா பொங்கலாக கொண்டாடுங்கள். நச்சுத் தன்மை வாய்ந்த பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றார் மதிவாணன். பேரணியில் கோட்டாட்சியாó முத்துமீனாட்சி, உதவி இயக்குநாó (பேரூராட்சிகள்) மணி, வட்டாட்சியர் அம்பிகாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka