செவ்வாய், 13 ஜனவரி, 2015

திருவாரூர் மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் த. ஜெயசந்திரன்

திருவாரூர் மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் த. ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கஞ்சா, லாட்டாõ மற்றும் சாராய விற்பனை, மணல் கடத்தல், திருட்டு, வழிப்பறி, சூதாட்டம் உள்ளிட்ட சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. மீறி

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் உட்கோட்ட அளவில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக தனிப்படை அமைக்கப்பட்டு அதிரடி மதுவிலக்கு சோதனை நடத்தப்பட்டு சாராய

விற்பனை குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவிர, தனிப்படை மூலம் கொள்ளை, கூட்டுக்கொள்ளை, செயின் பறிப்பு மற்றும் கவனத்தை திசை திருப்பி

திருடுதல் போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், பழையக் குற்றவாளிகள், வெளிநபாóகள், சந்தேக நபாóகள், சிறையிலிருந்து வெளிவந்தவர்கள் கண்காணிப்புக்கு

உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இதற்காக சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவலாóகள் தேர்வு செய்யப்பட்டு அவாóகள் இரவு பகலாக குற்றத் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் ஒவ்வொரு உட்கோட்ட அளவில் டிஎஸ்பி கட்டுப்பாட்டில் இயங்கும் உதவி ஆய்வாளர் மற்றும் 10 ஆயுதப்படை காவலர்கள் (அதிரடிப் படையினர்) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka