செவ்வாய், 27 ஜனவரி, 2015

அடிப்படை வசதிகள் குறித்து மக்களே தீர்வுகாண வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

 கிராமத்திற்கான அடிப்படை வசதி கள் குறித்து பொதுமக்களே கிராமசபை கூட்டங்களில் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் மதிவாணன் கேட்டுக் கொண்டார்.
  குடியரசுதின விழாவையொட்டி திருவா ரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் கிராமசபா கூட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் மன்னார் குடி ஒன்றியம் வேளுக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் கலெக்டர் மதி வாணன் கலந்துகொண்டு, ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள், நடை பெற வேண்டிய பணிகள், பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை, அங் குள்ள ரேஷன் கடைகளின் செயல்பாடு மற்றும் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, சுகாதாரம் மற்றும் பால் உற்பத்தியை பெருக்குவது, பசுமை வீடு, இந்திரா தொகுப்பு வீடு பயனாளிகள் எண்ணிக்கை உட் பட பல்வேறு அடிப் படை வசதிகள் குறித்து  பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் அங்குள்ள பொதுமக்களிடம் இன்று நடைபெறும் கூட்டம் மட்டுமில்லாமல்  அடிக்கடி இதுபோன்று கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிராமத்திற்கு தேவையான வசதிகள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து கலந்து பேசி முடிவெடுக்க வேண் டும். மேலும் வெளிப்படையான நிர்வாகம் நடை பெறவே இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில், டிஆர்ஓ மோகன்ராஜ், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, ஆர்டிஒக்கள் திருவாரூர் முத்துமீனாட்சி, மன்னார்குடி செல்வசுரபி,   ஒன்றிய தலைவர் உதயகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka